சுடச் சுடச் செய்திகள்

இந்திய நாட்டவரிடம் திருடியவருக்குச் சிறை

இந்திய நாட்டவரிடமிருந்து $350 பெறுமானமுள்ள கைபேசியைத் திருடிய 29 வயது முகம்மது ஹனாஃபியா ஜுமாஹாட்டுக்கு மூன்று ஆண்டு சிறையும் 12 பிரம்படிகளும் விதிக்கப்பட்டன. இந்தக் குற்றச் செயல் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 28ஆம் தேதியன்று நிகழ்ந்தது. உறவினர் களான 37 வயது முகம்மது ஹஃபிஸ் ஜுமாட், 49 வயது சானி சபார் ஆகியோருடன் சேர்ந்து 33 வயது திரு முத்து சுரே‌ஷிடமிருந்து கைபேசியைத் திருடியதை அவர் ஒப்புக்கொண்டார்.

இரவு 10.50 மணி அளவில் தாமான் ஜூரோங், தா சிங் சாலை, புளோக் 324ல் உள்ள உடற்பயிற்சிக் கூடத்தில் தமது கைபேசியைப் பயன்படுத்திக்கொண்டிருந்த திரு முத்து சுரேஷை அவர்கள் தாக்கி கைபேசியைத் திருடிச் சென்றனர். தாக்குதலில் திரு முத்து சுரே‌ஷின் மூக்கில் எலும்பு முறிவும் தாடையிலும் வலது தோள்பட்டையி லும் காயங்களும் ஏற்பட்டன. அவருக்கு இங் டெங் ஃபோங் மருத்துவமனையில் சிகிச்சை வழங்கப்பட்டு ஆறு நாட்கள் மருத்துவ விடுப்பு வழங்கப்பட்டது. மற்ற இருவருக்கும் ஏற்கெனவே தண்டனை வழங்கப்பட்டுவிட்டது.