ஈரறை வீட்டிலிருந்து மீட்கப்பட்ட 94 பூனைகள்

ஃபெர்ன்வேல் வட்டாரத்தில் உள்ள ஓர் ஈரறை வீட்டில் 94 பூனைகள் அவல நிலையில் வைக்கப்பட்டிருந் தது தொடர்பாக வேளாண் உணவு, கால்நடை மருத்துவ ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. அண்டைவீட்டார் செய்த புகாரை அடுத்து அந்த பூனைகள் மீட்கப் பட்டன. அந்த பூனைகள் மிகவும் மோசமான நிலை வைக்கப்பட்டி ருந்ததாக அவற்றை மீட்ட தொண்டூழியக் குழு தெரிவித்தது.

மோசமான நிலையில் வைக்கப்பட்டிருந்த பூனைகள். படம்: பூனைகள் நலச் சங்கம்