சாலை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் காயம்

தாமான் ஜூரோங் வட்டாரத்தில் நேற்று முன்தினம் மாலை விபத்து ஒன்று நிகழ்ந்தது. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் சென்று கொண்டிருந்த கார் லாரியுடன் மோதியது. அதனைத் தொடர்ந்து நடைபாதை மீது ஏறிய கார் மரத்தின் மீது மோதியது. இறுதியில் அருகில் இருந்த பள்ளத்தில் அது விழுந்தது. காரில் பயணம் செய்து கொண்டிருந்த மூவரும் காய மடைந்தனர். காரில் இருந்தவர் களைக் காப்பாற்ற அங்கிருந்த 10க்கும் மேற்பட்ட வழிப்போக்கர்கள் விரைந்ததாக தெரிவிக்கப்பட்டது.- கார் ஓட்டுநரான 25 வயது குமாரி சாங் ஹுயிபிங், அவரது 22 வயது தங்கை, அவரது 57 வயது தந்தையார் ஆகியோர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

குமாரி சாங்கின் தந்தைக்கு மூளையில் ரத்தக் கசிவு ஏற்பட்டுள்ளது. அவர் விபத்துக் குள்ளான காரில் ஏறத்தாழ அரைமணி நேரத்துக்கு சிக்கித் தவித்ததாகக் கூறப்படுகிறது. அவருக்கு தேசிய பல்கலைக்கழக மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. குமாரி சாங்கின் நெற்றியில் 14 தையல்கள் போடப்பட்டன. அவரது முகத்திலும் பல வெட்டுக் காயங்கள் இருந்ததாக அறியப்படு கிறது. அவரது தங்கை வீடு திரும்பியுள்ளார்.

விபத்தில் நொறுங்கி பள்ளத்தில் விழுந்த கார். படம்: ‌ஷின்மின்

இப்பகுதியில் மேலும் செய்திகள்

பயனாளர்கள் தங்களுக்குக் கிடைத்த பள்ளிக்குத் திரும்புதல் பற்றுச்சீட்டுகளைக் கொண்டு, அங்கு நடைபெற்ற விற்பனைச் சந்தையில் சிறப்பு விலைக் கழிவுகளில் பள்ளிப்பைகளையும் காலணிகளையும் வாங்கிக்கொள்ளலாம்.  படம்: சாவ் பாவ்

07 Dec 2019

பள்ளிக்குத் தயாராவதற்கு உதவிக்கரம்

உரிமக் கட்டணங்களைத் தவிர்த்து, வைப்புத் தொகையாக சைக்கிள் ஒன்றுக்கு $30யை நிறுவனங்கள் செலுத்த வேண்டியிருந்தது. கோப்புப்படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

07 Dec 2019

பகிர்வு சைக்கிள் நிறுவனங்களுக்கான உரிமக் கட்டணம் பாதியாகக் குறைப்பு

கூகல் வரைபடத்திலிருந்து எடுக்கப்பட்டது.

07 Dec 2019

ராபின்சன் சாலையில் மூன்று தடங்கள் நாளை மூடப்படும்