நன்னெறிகளைப் போதிக்க பெற்றோருக்கு நேரமில்லை

பிள்ளைகளுக்கு நன்னெறிகளைப் புகட்டுவதில் பெற்றோருக்குத்தான் அதிகப் பொறுப்பு உள்ளது என்று சிங்கப்பூர் கனிவன்பு இயக்கம் நடத்திய பண்புநெறிகள் ஆய்வில் பங்கெடுத்த பெரும்பாலான பெற் றோரும் பெற்றோர் அல்லாதவர் களும் தெரிவித்துள்ளனர். இருப்பினும், பிள்ளைகளுக்கு நன்னெறிகளைப் புகட்ட அவர் களுடன் நேரம் செலவழிக்க தங்களுக்கு நேரம் போதவில்லை என்று ஆய்வில் பங்கெடுத்த பெற்றோர் பலர் கூறினர். இந்த ஆய்வில் மொத்தம் 3,066 பேரிடம் நேருக்கு நேர் பேட்டி எடுக்கப்பட்டனர். ஆய்வு இரண்டு கட்டங்களாக நடத்தப் பட்டது. முதல் கட்ட ஆய்வு கடந்த ஆண்டு ஜூலை மாதத்திலிருந்து ஆகஸ்ட் மாதம் வரை நடத்தப்பட்டது.

இரண்டாவது கட்ட ஆய்வு கடந்த ஆண்டு டிசம்பர் மாதத் திலிருந்து இவ்வாண்டு ஜனவரி மாதம் வரை நடத்தப்பட்டது. பெற்றோரின் பங்களிப்பு பற்றிய கேள்விகள் இரண்டாவது கட்ட ஆய்வில்தான் சேர்க்கப்பட்டன. இந்த ஆய்வில் 1,509 பேர் பங்கெடுத்தனர். அவர்களில் 557 பெற்றோரும் அடங்குவர். ஆய்வில் பங்கெடுத்தவர்களில் 90 விழுக்காட்டுக்கும் மேற்பட்டோர் பிள்ளைகளுக்கு நன்னெறிகளைப் புகுட்டுவதில் பெற்றோர்தான் ஆக அதிகப் பொறுப்பேற்கவேண்டும் என்று தெரிவித்தனர். பிள்ளைகளுக்கு நன்னெறி களைப் புகட்ட பெற்றோர் கூடு தல் முயற்சி எடுக்கலாம் என்று அவர்கள் கூறினர்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon