சுடச் சுடச் செய்திகள்

தாக்குதல், கொள்ளை: ஆடவருக்குச் சிறை

டாக்சி ஓட்டுநரிடம் பணத்தைக் கொள்ளையடித்துவிட்டு அவரைத் தாக்கி காயம் விளைவித்த ஆடவருக்கு 15 மாதங்கள், மூன்று வாரச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 22ஆம் தேதியன்று காலை 7 மணி அளவில் டாக்சியில் ஏறினார் 22 வயது சக்திவேலன் இளங்கோவன். டாக்சி ஓட்டுநரான 73 வயது திரு பூ ஆ சூனிடம் ஹவ்காங் ஸ்திரீட் 32ல் உள்ள பார்க் வேரா கொன்டோமினியத் துக்குப் போகச் சொன்னார்.

பார்க் வேரா கொன்டோ மினியத்தை அடைந்ததும் தம்மிடம் ரொக்கம் இல்லை என்று திரு பூவிடம் சக்திவேலன் தெரிவித்தார். டாக்சி கட்டணத்தை நெட்ஸ் அல்லது கடன் அட்டை வழியாக வும் செலுத்தலாம் என்று திரு பூ கூறியதை அடுத்து சக்திவேலன் அவரிடம் ஒரு விலை தள்ளுபடி அட்டையைக் கொடுத் தார். அந்த அட்டை ஒரு ஈசி லிங்க் அட்டை என்றும் அதைப் பயன் படுத்தி டாக்சி கட்டணத்தைச் செலுத்தலாம் என்றும் சக்தி வேலன் டாக்சி ஓட்டுநரிடம் கூறினார். டாக்சி கட்டணம் எவ்வளவு என்பது குறித்து நீதிமன்ற ஆவணங்கள் தெரிவிக்கவில்லை.

சக்திவேலன் இளங்கோவன். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon