சுடச் சுடச் செய்திகள்

அண்டைவீட்டாருடன் பழகுவது குறைவு

சிங்கப்பூரில் வசிப்பவர்கள் தங்கள் அண்டைவீட்டாருடன் பழுகுவது குறைவு. பக்கத்துக்கு வீட்டில் வசிப்பவர்களுடன் பேசுவதற்குப் பதிலாகப் பலர் தனித்திருப்பதை விரும்புகின்றனர். இந்தத் தகவலை சிங்கப்பூர் கனிவன்பு இயக்கம் நடத்திய ஆக அண்மைய பண்புநெறிகள் ஆய்வு மூலம் தெரிய வந்துள்ளது. ஆய்வில் பங்கெடுத்தவர்களில் 23% மட்டுமே வாரத்துக்கு மூன்று முறைக்கு அதிகமாக தங்கள் அண்டை வீட்டாருக்கு வணக்கம் கூறியதாக தெரியவந்துள்ளது. இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டு 29 விழுக்காடாக இருந்தது. அண்டைவீட்டாருடன் வாரத்துக்கு மூன்று முறைக்கும் அதிகமாக நட்புமுறையில் சிறிது நேரம் பேசுவோரின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது. இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டு 17 விழுக்காடாக இருந்தது. இந்த ஆண்டில் அது 11 விழுக்காட்டுக்குச் சரிந்தது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon