ஈஸ்வரன்: நிறுவனங்கள் உருமாற உதவி தொடரும்

நிறுவனங்கள், குறிப்பாக சிறிய, நடுத்தர நிறுவனங்கள் மின்னிலக்கமயமாக மாறி நவீன உற்பத்தித் தொழில்நுட்பங்களைக் கைகொண்டு உருமாறுவதற்கு அரசாங் கம் தொடர்ந்து ஆதரவு அளித்துவரும் என்று வர்த்தக தொழில் (தொழில்) அமைச்சர் எஸ் ஈஸ்வரன் தெரிவித்தார். மார்சிலிங்கில் $6 மில்லியன் செலவி லான புதிய மின்னிலக்கத் தயாரிப்புத் தொழிற்சாலை திறப்பு நிகழ்ச்சியில் உரை யாற்றிய அமைச்சர், சிங்கப்பூரில் உற்பத்தித் துறையின் போட்டித்திறனை உறுதிப்படுத்து வதில் மின்னிலக்க உற்பத்திப் பாணியே மிகமுக்கியமானது என்று வலியுறுத்திக் கூறினார். சிங்கப்பூர் பொருளியலின் முக் கியமான தூண்களில் ஒன்றாக உற்பத்தித் துறை திகழ்வதை அவர் சுட்டிக்காட்டினார்.

உற்பத்தித் துறையில் மின்னிலக்கமயம் என்பது அந்தத் துறையை அடிப்படையில் உருமாற்றி அமைப்பதாக இருக்கிறது. மனித இயந்திரங்கள், தானியக்கமயம், உற்பத்தித் துறை தகவல் பகுப்பாய்வு, நிறுவன விவேக ஆற்றல்கள் எல்லாம் உற்பத்தித் தொழில்துறை செயல்படும் விதத் தையே மாற்றி அமைக்கின்றன என்பதை அமைச்சர் சுட்டிக்காட்டினார். சிறிய, நடுத்தர நிறுவனங்கள் தங் களுடைய ஆற்றல்களை மேம்படுத்திக் கொள்வதற்கு மார்சிலிங்கில் புதிதாக திறக்கப்பட்டிருக்கும் ஃபெய்ன்மெட்டால் சிங்கப்பூர் நிறுவனத்தின் மின்னிலக்க உற்பத்தி ஆலை அருமையான எடுத்துக் காட்டு என்று அவர் குறிப்பிட்டார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon