880,000 குடும்பங்களுக்குப் பற்றுச்சீட்டு

இம்மாதம் 880,000 சிங்கப்பூரர் குடும்பங்களுக்கு ஜிஎஸ்டி பற்றுச்சீட்டு - யூசேவ் கட்டணக் கழிவு வழங்கப்படுகிறது என்று நேற்று வெளியிட்ட அறிக்கையில் நிதி அமைச்சு தெரிவித்தது.

தகுதிபெற்ற குடும்பங்கள் தங்களது வீட்டின் அளவைப் பொறுத்து தலா $95 பெறுவர்.

உதாரணமாக ஓரறை, ஈரறை வீட்டில் குடியிருப்பவர்கள் அதிகபட்ச தொகையைப் பெறுவர்.

அதே சமயத்தில் :மூவறை வீட்டில் வசிக்கும் குடும்பங்களுக்கு 85 வெள்ளியும் நான்கறை வீடுகளுக்கு 75 வெள்ளியும் ஐந்தறை வீடுகளுக்கு 65 வெள்ளியும் எக்சிகியூட்டிலவ் மற்றும் பலதலைமுறை வீடுகளுக்கு 55 வெள்ளியும் கிடைக்கும். தண்ணீர் விலை உயர்வைச் சமாளிக்கும் வகையில் இம்மாதத்தில் இருந்து ஆண்டு ஜிஎஸ்டி பற்றுச்சீட்டு - யூசேவ் கழிவு $40