சிங்கப்பூர் - கோலாலம்பூர் அதிவேக ரயில் திட்டம்; தொழில் வாய்ப்புகளைக் கைப்பற்ற கூட்டு முயற்சி

சிங்கப்பூருக்கும் மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூருக்கும் இடையே அமையவுள்ள அதிவேக ரயில் ரயில் திட்டங்களின் தொழில் வாய்ப்புகளைக் கைப்பற்றுவதற்காக சிங்கப்பூரின் ஆறு நிறுவனங்கள் ஒன்றாக இணைந்துள்ளன. இந்த விவரத்தை 'ஐஇ' சிங்கப்பூரும் ஆறு நிறுவனங்களும் நேற்று வெளியிட்டன.

கிளிஃபர்ட் கேப்பிட்டல், டிபிஎஸ், செம்ப்கார்ப் டிசைன் அண்ட் கன்ஸ்ட்ரக்‌ஷன், எஸ்எம்ஆர்டி இன்டர்நே‌ஷனல், கர்பானா ஜூரோங், எஸ்டி என்று அழைக்கப்படும் சிங்கப்பூர் டெக்னாலஜிஸ் எலக்ட்ரானிக்ஸ் ஆகியவை அந்த ஆறு நிறுவனங்கள்.

அதிவேக ரயில் திட்டங்களில் பங்கேற்பதற்காக அனைத்துலக நிறுவனங்களுடன் சேர்ந்து செயல்படும் திட்டமும் உள்ளதாக ஆறு நிறுவனங்களும் தெரிவித்தன.

சிங்கப்பூர், மலோசிய அரசாங்கங்கள் திட்டமிட்டுள்ள 350 கிலோ மீட்டர் ரயில் திட்டம் 2026ல் செயல்படத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படீடுகிறது.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

ஆள் நடமாட்டமற்ற டர்ஃப் கிளப் அவென்யூவில் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தியாளர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

20 May 2019

அச்சத்தில் குடியிருப்பாளர்கள்; கூடுதல் பாதுகாப்பு கோரியுள்ளனர்

சாக்கியமுனி புத்த கயா ஆலயத்தில் புத்த சிலையின்மீது தங்கத் தகடுகள் வைத்து பலரும் வழிபட்டனர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

20 May 2019

நிம்மதி நல்கும் விசாக தினம்