சுடச் சுடச் செய்திகள்

விளையாட்டுகள் மூலம் சமூக ஈடுபாடு

சுதாஸகி ராமன்

இந்திய சமூகத்தின் பிணைப்பை மேலும் வலுப்படுத்த சமூக அமைப்புகள் நடத்தும் நிகழ்ச்சிகள், நடவடிக்கைகளை ஆகியவற்றில் மேலும் பல இளையர்கள் ஈடுபட வேண்டும் என்று வர்த்தக, தொழில் அமைச்சர் (தொழில்) திரு எஸ்.ஈஸ்வரன் வலியுறுத்தினார்.

மக்கள் கழக நற்பணிப் பேரவை ஆண்டுதோறும் ஏற்பாடு செய்யும் குடும்ப தினத்தில் திரு ஈஸ்வரன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு இதைத் தெரிவித்தார்.

":சமூகப் பிணைப்புக்கும் நாட்டின் வளர்ச்சிக்கும் சமூக ஈடுபாடு மிகவும் அவசியம். இதில் முக்கியமாக இளையர்களை ஈடுபடுத்த வேண்டும். நற்பணிப் பேரவை போன்ற சமூக அமைப்புகளை இளையர்கள் எதிர்காலத்தில் தலைமை தாங்கி அவற்றை நடத்த வேண்டும் என்பதால் இது முக்கியமாகிறது," என்றும் அவர் கூறினார்.

சிங்கப்பூரில் சமூக பிணைப்பு, வளர்ச்சி ஆகியவை நல்ல அளவிற்கு வளர்ந்துள்ளதைச் சுட்டிக்காட்டிய அமைச்சர், இங்கு வலுவான அடித்தளத்தை உருவாக்கி இந்தியர்கள் முன்னேற் இந்திய நற்பணிக் குழுக்கள் ஆற்றிவரும் முக்கிய பங்கைப் பாராட்டினார்.

நற்பணிப் பேரவையின் செயற்குழுக்கள் இவ்வாண்டு 40வது ஆண்டுநிறைவைக் கொண்டாடுகின்றன. இதைக் கொண்டாடும் விதத்தில் 'புரொஜெக்ட் கேட்' எனும் திட்டத்தின் வழி சுமார் 18,000 வசதி குறைந்தவர்களுக்கு உதவி செய்து அவர்களைச் ச:மூகத்தில் இணைக்கிறது.

அத்துடன், இவ்வாண்டின் குடும்ப தின நிகழ்ச்சியில் 'சிங்கம்ஸ்' எனும் விளையாட்டு ஆர்வலர் குழுவை (Sports Interest Group for Amateurs) நற்பணிப் பேரவையின் இளையர் சங்கம் தொடங்கி வைத்துள்ளது.