நாடாளுமன்ற விவாதம் விடைகளைத் தரக்கூடியது

ஆக்ஸ்லி ரோடு வீடு தொடர்பில் நேற்று நாடாளுமன்றத்தில் பேசிய உறுப்பினர்களில் ஒருவர் புக்கிட் பாத்தோக் தனித் தொகுதி உறுப் பினர் திரு முரளி பிள்ளை. ஆக்ஸ்லி ரோடு வீடு தொடர் பிலான தெரிவுகளை முடிவு செய் யும் அமைச்சர்நிலைக் குழுவிடம் திரு முரளி ஆறு கேள்விகளை முன் வைத்தார். "ஆகஸ்லி ரோடு வீடு தொடர் பில் அமரர் திரு லீ குவான் இயூ வின் உயிலில் உள்ள அம்சங் கள் வெளிப்படையாக அனைவ ருக்கும் தெரிவிக்கப்பட்ட பிறகு, 2016ல் அது குறித்து அமரர் லீயின் பிள்ளைகளிடம் கருத்து கேட்க ஏன் அமைச்சர்நிலைக் குழு முடிவு செய்தது? அமரர் லீயின் பிள்ளைகளின் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளைக் கொண்ட தகவல், ஆக்ஸ்லி ரோடு வீடு பற்றிய தெரிவுகளைக் குழு பட்டியலிட எவ்வாறு உத வியது?

"வீடு தொடர்பில் திரு லீ குவான் இயூ கொண்டிருந்த விருப்பங்கள் பற்றி திரு சியன் யாங், டாக்டர் லீ வெய் லிங் ஆகியோரிடம் கேட்டறிந்த பிறகு, துணைப் பிரதமர் டியோ, அமைச் சர் லாரன்ஸ் வோங் இருவரைத் தவிர, அமைச்சர்நிலைக் குழு வில் உள்ள, இதர உறுப்பினர்கள் யாவர் என்பதை ஏன் அவர்களி டம் தெரிவிக்கவில்லை? போன்ற கேள்விகளை திரு முரளி முன் வைத்தார். இந்தக் கேள்விகளைப் பட்டிய லிட்டு, தொடர்ந்த திரு முரளி "உறுப்பினர்கள் சிலர் இந்த விவாதம் அர்த்தமற்றது என்று கூறுவதைக் கேட்டு ஏமாற்றம டைந்தேன். "பிரதமர் தனது அதிகாரத் தைத் தவறாகப் பயன்படுத்துகிறார் என்று கூறிய அவரது உடன் பிறப்புகளான திரு சியன் யாங் கும் டாக்டர் லீ வெய் லிங்கும் இந்த நாடாளுமன்றத்தில் இல்லை என்றாலும் அவர்கள் கூறிய குற்றச்சாட்டுகளுக்கு விடை காண்பது இந்த மன்றத் தின் கடமையாகும்.

"பிரதமரும் அவரது அமைச் சர்களும் மன்ற உறுப்பினர்கள் முன்வைத்த கேள்விகளுக்குப் பதில் கூறுவதைக் கேட்பதற்கு முன்னதாகவே உறுப்பினர் சிலர் ஒரு முடிவுக்கு வருவது வேத னையளிக்கிறது," என்றும் திரு முரளி தெரிவித்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!