தலைமைச் சட்ட அதிகாரி நியமனம் முரண்பாடானது

அமரர் லீயின் வீடு குறித்த விவகாரங்களில் தலைமைச் சட்ட அதிகாரி லூசியன் வோங், துணைத் தலைமைச் சட்ட அதி காரி ஹரிகுமார் நாயர் ஆகியோ ரின் நியமனங்கள் முரண்பாடா னது என்று பாட்டாளிக் கட்சியின் தலைவி செல்வி சில்வியா லிம் கூறியுள்ளார். பிரதமர் லீ சியன் கூங் அர சாங்க அமைப்புகளைத் தங்க ளுக்கு எதிராகப் பயன்படுத்தி யுள்ளார் என்று பிரதமரின் உடன் பிறப்புகள் திரு லீ சியன் யாங்கும் டாக்டர் லீ வெய் லிங்கும் முன் வைத்த குற்றச்சாட்டுகள் குறித் துச் சில்வியா லிம் கருத்து ரைத்தார்.

திரு லூசியன் வோங் பிரதமர் லீயின் தனிப்பட்ட வழக்கறிஞரா கப் பணிபுரிந்ததால்தான் அவருக் குத் தலைமைச் சட்ட அதிகாரி பதவி கிடைத்தது எனும் கருத் துகளையும் பிரதமரின் உடன் பிறப்புகள் வெளிப்படுத்தியுள் ளனர். திரு வோங், திரு ஹரிகுமார் ஆகியோரின் நியமனங்கள் குறித்து இதற்கு முன்பாகக் கேள்வி எழுப்பியுள்ளார். திரு வோங், சட்ட அமைச்சர் கே சண்முகம் பணி புரிந்த அதே நிறுவனத்தில் பணியாற்றினார் என்றும் லீயின் வீடு குறித்துத் தனிப்பட்ட முறையில் பிரதமருக் குப் பல முறை ஆலோசனை வழங்கியுள்ளார் என்றும் செல்வி சில்வியா கூறினார். இந்த விவகாரத்திலிருந்து திரு வோங்கும் குறிப்பாக முன் னாள் நாடளுமன்ற உறுப்பினரான திரு நாயரும் ஒதுங்கியிருப்பார் களா என்றும் செல்வி சில்வியா கேள்வி எழுப்பினார்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

புக்கிட் பாத்தோக் ஸ்திரீட் 21ல் உள்ள புளோக் 293Dஇன் 26ஆவது மாடியில் தீப்பிடித்த வீட்டிலிருந்து மீட்கப்பட்ட தம்பதியரில் ஆடவர் மருத்துவமனையில் உயிரிழந்துவிட்டார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

21 Jul 2019

புக்கிட் பாத்தோக் வீட்டில் தீ; மீட்கப்பட்ட ஆடவர் மருத்துவமனையில் உயிரிழந்தார்

சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சர் டெஸ்மண்ட் லீ தெரிவித்தார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

21 Jul 2019

துரிதமான, எளிமையான முறையில் அதிகார பத்திரம்