சுடச் சுடச் செய்திகள்

‘முரண்பாட்டுக் குற்றச்சாட்டுகள் அடிப்படையில்லாதவை’

தலைமைச் சட்ட அதிகாரி அலு வலக விவகாரத்தில் சொந்த நல னுக்கும் கடமைக்கும் இடையே யான முரண்பாட்டு நிலை இருப்ப தாகக் கூறுவதற்கு எந்தவித அடிப்படையும் இல்லை என்று சட்ட, நிதி மூத்த துணை அமைச் சர் இந்திராணி ராஜா நேற்று நாடாளுமன்றத்தில் கூறினார். திரு லீ குவான் இயூவின் இளைய பிள்ளைகள் திரு லீ சியன் யாங், டாக்டர் லீ வெய் லிங் இருவரும் ஆக்ஸ்லி சாலை சர்ச்சை குறித்த இணையப் பதி வேற்றங்களில் தலைமைச் சட்ட அதிகாரி லூசியன் வோங்கின் பெயரைக் குறிப்பிட்டிருந்தனர். இவர் தங்களது அண்ணனும் பிரதமருமான லீ சியன் லூங்கின் தனிப்பட்ட வழக்கறிஞராக இருந்த வர் என்றும் இவ்வாண்டு ஜனவரி மாதம் இந்தப் பதவியில் நியமிக்கப் பட்டார் என்றும் அவர்கள் சுட்டிக் காட்டினர்.

முன்பு மக்கள் செயல் கட்சி உறுப்பினராக இருந்த துணைத் தலைமைச் சட்ட அதிகாரி ஹரி குமார் நாயரின் நியமனத்திலும் முரண்பாட்டுநிலை இருக்கக் கூடிய சாத்தியம் என்பது பற்றி எதிர்க் கட்சி நாடாளுமன்ற உறுப் பினர் சில்வியா லிம்மும் இதேபோல கேள்வி எழுப்பியிருந்தார். திரு நாயர் முன்னதாக இவ்வாண்டு கட்சியிலிருந்து விலகிக்கொண் டார். இதற்குப் பதிலளித்த குமாரி இந்திராணி, திரு லூசியன் வோங் “தலைசிறந்த சட்டத்துறை திறனா ளர்களில் ஒருவராகப் பரவலாக அங்கீகரிக்கப்படுகிறார்” என்றும், நாட்டின் “தலைசிறந்த ஆறேழு வழக்கறிஞர்களில்” திரு நாயரும் ஒருவர் என்றும் கூறினார். எனவே, அவர்களது முந்தைய தொடர்பு களின் அடிப்படையில் இந்தப் பதவிகளை அவர்களுக்குத் தராதி ருப்பதற்கு எந்தவிதக் காரணமும் இல்லை என்றார் அவர்.

ஏனெனில், “முரண்பாட்டுநிலை விதிமுறைகள் மிகவும் தெளிவா னவை. ஏதேனும் முரண்பாட்டு நிலை எழும்போது தலைமைச் சட்ட அதிகாரியும் துணைத் தலை மைச் சட்ட அதிகாரியும் அதில் சம்பந்தப்படமாட்டார்கள். இவ்விரு வரும் இந்த விதிமுறையைக் கடைப்பிடிக்கவில்லை என்று சொல்வதற்கு எந்தவித அடிப்படை யும் இல்லை,” என்றார் குமாரி இந்திராணி.

அமரர் லீயின் உயில் குறித்து குழு கேள்விகள் எழுப்பியதே இளைய லீ உடன்பிறப்புகளின் அக்கறையைத் தூண்டியிருப்ப தாகத் தோன்றுகிறது என்றார் மூத்த துணை அமைச்சர் இந்திராணி ராஜா. தொலைக்காட்சிப் படம்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon