சுடச் சுடச் செய்திகள்

கலையம்ச சொத்துகள் உரிய நடைமுறைக்கு உட்படும்

கட்டடக்கலை அம்சங்களுடன், பாராம்பரிய முக்கியத்துவத்து டன் கூடிய எல்லா சொத்து களும் அவற்றுக்கே உரிய நடை முறைக்கு உட்படுத்தப்படவேண் டும் என்று தேசிய வளர்ச்சி அமைச்சர் லாரன்ஸ் வோங் தெரிவித்தார். இத்தகைய சொத்துகளில் எண் 38 ஆக்ஸ்லி ரோடு முக வரியில் இருக்கும் வீடும் உள்ள டங்கும் என்றார் அவர். அதாவது இத்தகைய சொத் துகளின் பழமையைப் பாது காத்து வைப்பதா, அவற்றைப் புதுப்பித்து கட்டிக்காப்பதா என் பதை முடிவு செய்தவதற்கு முன் இத்தகைய சொத்துகள் கடுமை யான மதிப்பிட்டு நடைமுறைக்கு உட்படுத்தப்படும் என்று நாடாளு மன்றத்தில் நேற்று அமைச்சர் தெரிவித்தார். முன்னாள் பிரதமர் லீ குவான் இயூவின் ஆக்ஸ்லி ரோடு வீட்டுக்கான விருப்ப உரிமைகளை ஆராய்வதற்காக சென்ற ஆண்டு அமைச்சர் நிலை குழு அமைக்கப்பட்டதற்கு முன்பே இந்த விவகாரம் தொடர் பில் கீழ்மட்டத்தில் பல்வேறு அமைப்புகளும் செயல்பட்டு வந் துள்ளன என்றார் அமைச்சர்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon