சுடச் சுடச் செய்திகள்

‘பிரதமரைப் பதவியிலிருந்து இறக்குவதுதான் இலக்கு என்பது தெளிவாகத் தெரிகிறது’

பிரதமர் லீ சியன் லூங்கின் நேர்மையில் தமக்கு “முழு நம் பிக்கை” இருப்பதாகக் கௌரவ மூத்த அமைச்சர் கோ சோக் டோங் (படம்) தெரிவித்துள்ளார். ஆக்ஸ்லி ரோடு வீடு தொடர் பான விவகாரத்தில் பிரதமர் லீ தமது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறப்பட்ட குற்றச்சாட்டுகள் பற்றி நாடாளு மன்றத்தில் பேசிய திரு கோ, இந்த விவாதம் தெளிவான முடி வுடன் நிறைவு பெறவேண்டும் என்று கூறினார். “இரு தரப்பினரும் அரசாங்க மும் இவ்வளவு தூரம் பேசிய பிறகு, குற்றச்சாட்டுகள் ஆதாரம் அற்றவை என்பது தெளிவாகத் தெரிகிறது,” என்றார் திரு கோ. “பிரதமர் மீதும் அரசாங்கத் தின் மீதும் சிங்கப்பூரர்கள் தொடர்ந்து நம்பிக்கை வைத்து இருந்தாலும், பொதுமக்கள் குழப் பமும் கவலையும் அடைந்துள்ளனர்.

எனவே, நிலைமையை விளக் கிக்கூறி, நம்பிக்கையை மீண்டும் நிலைநாட்டவேண்டிய அவசியம் எழுந்துள்ளது. இதைச் செய்வது எங்களது கடமை, பொறுப்பு. எங்களது வாக்காளர்களிடம் இதற்கு நாங்கள் பொறுப்பேற்க வேண்டும்,” என்றார் திரு கோ. “அவர்கள் சிங்கப்பூரைக் காப் பாற்ற வேண்டும் என்ற மேன்மை யான நோக்கத்துடன் தகவல் வெளியிடுகிறார்களா, அல்லது சிங்கப்பூருக்கு நேரும் தீங்கைப் பற்றி எந்தவித அக்கறையுமின்றி சொந்த நோக்கத்துடன் பகை தீர்க்கிறார்களா? நான் எல்லா வற்றையும் காதுகொடுத்துக் கேட்கிறேன். லீ சியன் யாங்கும் அவரின் மனைவியும் பலரிடமும் கூறி வருவதைக் கேள்விப்படும் போது, அரசாங்கத்திற்கும் சிங் கப்பூரர்களுக்கும் ஏற்படக்கூடிய பேரிழப்பைப் பொருட்படுத்தாமல், லீ சியன் லூங்கைப் பிரதமர் பதவியிலிருந்து இறக்குவதே அவர்களது இலக்கு என்பது தெளிவாகத் தெரிகிறது,” என்று திரு கோ தெரிவித்தார்.

ஆக்ஸ்லி ரோடு வீட்டை என்ன செய்வது என்பதைப் பரி சீலிக்கும் அமைச்சர்நிலைக் குழு விலிருக்கும் துணைப் பிரதமர் டியோ, அமைச்சர்கள் ஆகியோ ரின் குணநலன்களிலும் தனக்கு நம்பிக்கை இருப்பதாக அவர் உறுதிப்படுத்தினார். புரிந்துணர்வின்மையைப் பேசித் தீர்த்து சமரசமாகி பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணும்படி, அல்லது நிலைமை மோசமடையா மல் தடுக்கும்படி லீ உடன்பிறப்பு களிடம் அவர் வலியுறுத்தினார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon