‘திருவாட்டி ஹோ பிரதமர் அலுவலகத்தைப் பிரதிநிதிக்கவில்லை’

சிங்கப்பூரின் முதல் பிரதமர் லீ குவான் இயூ பயன்படுத்திய பொருட்களில் சில பொருட்களை தேசிய மரபுடமை கழகத்திற்குக் கடனாகக் கொடுக்க பிரதமரின் மனைவியான ஹோ சிங் ஏற்பாடு செய்தார் என்றும் இப்படிச் செய்ததன் மூலம் அவர் பிரதமர் அலுவலகம் சார்பில் செயல்பட்டு இருக்கிறார் என்றும் கூறப்படுவது உண்மையா என்று நாடாளுமன்றத்தில் பாட்டாளிக் கட்சித் தலைவர் லோ தியா கியாங் கேள்வி எழுப்பினார். பிரதமர் லீ சியன் லூங் நேற்று இதற்குப் பதிலளித்தார். “திருவாட்டி ஹோ பிரதமர் அலுவலகத்தைப் பிரதிநிதிக்கவில்லை. அவர் ஆக்ஸ்லி ரோடு வீட்டில் இருந்த பொருட்களில் நான்கு பொருட்களைப் பார்த்து அவை தேசிய மரபுடமை கழகம் விரும்பக்கூடிய பொருட்களாக இருக்கும் என்று கருதினார். “அந்தப் பொருட்களை வாரியத்திற்கு அனுப்ப பிரதமர் அலுவலகம் வழியாக பிரதமர் லீ சியன் லூங் உதவினார்,” இவ்வாறு திரு லீ குறிப்பிட்டார். திருவாட்டி ஹோ பிரதமர் அலுவலகம் சார்பில் செயல்பட்டு இருக்கிறார் என்று கூறுவது மிகைப்படுத்தப்பட்ட ஒன்று என்று பாட்டாளிக் கட்சித் தலைவருக் குப் பிரதமர் பதில் அளித்தார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon