‘என் தந்தையை ஏமாற்றவில்லை’

குடும்ப வீட்டை அரசிதழில் குறிப்பிட்டு தன் தந்தையை தான் ஏமாற்றவில்லை என்றும் எண் 38 ஆக்ஸ்லி ரோடு குடும்ப வீடு அரசிதழில் குறிப்பிடப்படும் என்று அவர் நம்பும்படியாக தான் செய்து விடவில்லை என்றும் பிரதமர் லீ சியன் லூங் நாடாளுமன்றத்தில் தெரிவித்து இருக்கிறார். சிங்கப்பூரின் முதல் பிரதமர் லீ குவான் இயூ மறைவுக்குப் பிறகு அவருடைய வீட்டை இடிக்க விடாமல் தன்னுடைய அதிகாரத் தைப் பயன்படுத்தி பிரதமர் லீ சியன் லூங் தடுக்கிறார் என்று அவருடைய உடன்பிறப்புகள் புகார் தெரிவித்தனர்.

இதன் தொடர்பில் திங்கட் கிழமை பிரதமர் லீ நாடாளுமன் றத்தில் அமைச்சர்நிலை அறிக்கை யைத் தாக்கல் செய்தார். அந்த அறிக்கை தொடர்பில் நேற்று இரண்டாவது நாளாக நடந்த விவாதத்தை முடித்துவைத்து பேசியபோது பிரதமர் இந்த விவரங்களைத் தெரிவித்தார். எண் 38 ஆக்ஸ்லி ரோடு வீட்டை அரசிதழில் குறிப்பிடுவது தவிர்க்க முடியாதது அல்லது ஏற்கெனவே அந்த வீடு அப்படி குறிப்பிடப்பட்டுவிட்டது என்று பிரதமர் லீ தங்களுடைய தந்தை யிடம் தவறான கருத்தை ஏற் படுத்திவிட்டார் என்று பிரதமரின் உடன்பிறப்புகள் கூறுகிறார்கள். இதற்கு நாடாளுமன்ற உறுப்பினரிடம் நேற்று பதிலளித்த திரு லீ, “நான் என் தந்தையை ஏமாற்றவில்லை,” என்றார்.

“அந்த வீட்டை இடித்துவிட வேண்டும் என்பதே என்னுடைய தந்தையின் முதல் விருப்பம். “ஆனால் அந்த வீட்டை இடிப் பதற்குப் பதிலாக மாற்று ஏற்பாடு கள் குறித்து பரிசீலிக்க என் னுடைய தந்தை ஆயத்தமாக இருந்தாரா, இல்லையா என்பதன் தொடர்பில்தான் எனக்கும் என் உடன்பிறப்புகளுக்கும் இடையில் கருத்து வேறுபாடு உள்ளது,” என்று திரு லீ குறிப்பிட்டார். “திரு லீ குவான் இயூ 2011 ஜூலை 21ஆம் தேதி அந்த வீடு பற்றிய அமைச்சரவை கூட்டத்தில் கலந்துகொண்டார்.

“அந்த வீட்டை இடிக்கக் கூடாது என்று அமைச்சர்கள் ஏகமனதாக ஒப்புக்கொண்டார் கள். தான் மரணம் அடைந்த பிறகு அந்த வீட்டை அரசாங்கம் என்ன செய்யும் என்பதன் தொடர் பில் என் கருத்தை என்னுடைய தந்தை கேட்டார்.

“நான் என்னுடைய நேர்மை யான மதிப்பிட்டை அவரிடம் தெரியப்படுத்தினேன். “அமைச்சரவையை நீங்களே சந்தித்தீர்கள். அமைச்சர்கள் கூறுவதையெல்லாம் நீங்களே நேரடியாகச் செவிமடுத்தீர்கள் என்று என் தந்தையிடம் அப்போது நான் தெரிவித்தேன். “இதை என் தந்தை புரிந்து கொண்டார். இதற்குப் பிறகு அந்த வீட்டை இடிப்பதற்குப் பதி லாக புதுப்பிப்பதற்கான திட்டங் களை நானும் என் மனைவி ஹோ சிங்கும் தீட்டினோம். அதில் திரு லீ கையெழுத்திட்டார்.

“இது பற்றி குடும்ப உறுப்பினர் கள் அனைவருக்கும் தெரிவித்து 2012ல் மின்னஞ்சல் மூலம் பிரதி களை விநியோகித்தோம்,” என்று மன்றத்தில் தெரிவித்த பிரதமர், அந்த மின்னஞ்சல்களை படித்தும் காட்டினார்.

பிரதமரின் மறைவுக்குப் பிறகு 2015 ஏப்ரல் 13ஆம் தேதி நாடாளு மன்றத்தில் தன்னுடைய அறிக் கையை விளக்கிய பிரதமர், அந்த வீட்டில் தன்னுடைய சகோதரி வசிக்கும் வரையில் அந்த வீடு தொடர்பில் அரசாங்கம் எந்த முடி வும் எடுக்காது என்று தெரிவித்தார்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

வர்த்தகர் மாநாட்டில் முன்னாள் அதிபர் டோனி டான் கெங் யாமுடன் கைகுலுக்கும் துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

21 Sep 2019

‘சமூக ஒற்றுமைக்கு வர்த்தக தலைவர்கள் பங்காற்றலாம்’

நெக்ஸில் உள்ள ஃபேர்பிரைஸ் எக்ஸ்ட்ரா பேரங்காடியில் புகைமூட்டத்தை சமாளிப்பதற்குத் தேவையான பொருட்களுடன் தனிப் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. படம்: த நியூ பேப்பர்

21 Sep 2019

புகைமூட்டம்; காற்றாய் பறக்கும் சாதனங்கள்

அங் மோ கியோவில் நடைபெற்ற வேலை வாய்ப்பு கண்காட்சியில் அங்கு வந்திருந்த வர்களைச் சந்தித்த மனிதவள அமைச்சர் ஜோசஃபின் டியோ. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

21 Sep 2019

வேலை வாய்ப்பு கண்காட்சி; 100,000 பேரை எட்ட முயற்சி