நோயாளிகளை நன்கு கவனிக்க மருத்துவருக்கு வழிகாட்டி ஏடு

நீரிழிவு நோய் ஏற்படக்கூடிய நிலையில் இருக்கும் நோயாளி களை சிறந்த முறையில் மருத்து வர்கள் கவனிக்க உதவ ஒரு வழிகாட்டி ஏடு வெளியிடப்பட்டு இருக்கிறது. நோயாளிக்கு நீரிழிவு நோய் வந்துவிடுவதை இதன்மூலம் மருத்துவர்கள் தடுத்துவிட முடி யும். ‘ஏற்புடைய பராமரிப்பு வழி காட்டி ஏடு’ என்று குறிப்பிடப்படும் அந்த ஏட்டை ஏஜென்சி ஃபார் கேர் எஃபெக்டிவ்னஸ் என்ற அமைப்பு வெளியிட்டு இருக்கிறது. நீரிழிவு உள்ளவர்களுக்கு பொருத்தமான மருந்துகளை மருந் தாளர்கள் பரிந்துரைக்கவும் அந்த ஏடு உதவும். சுகாதார அமைச்சு சிங்கப்பூரில் நீரிழிவு நோய்க்கு எதிராக ஒரு போராட்டத்தை தொடங்கியிருக்கிறது.

அந்தப் போராட்டத்திற்கு ஆதரவாக இந்த ஏடு உருவாக்கப் பட்டு இருக்கிறது. 2014ல் வெளி யிடப்பட்ட சுகாதார அமைச்சின் மருந்தக நடைமுறை வழிகாட்டி ஏட்டிற்கு உறுதுணையாகவும் இந்தப் புதிய ஏடு திகழும். அந்த ஏடு சிங்கப்பூரில் உள்ள எல்லா மருத்துவர்களுக்கும் விநி யோகிக்கப்படும். இணையத்திலும் அதைப் பெறலாம். நோயாளிகளை அணுக்கமாகக் கண்காணித்து அவர்களை குணப் படுத்துவதற்கு முறையான வழி முறைகள், வாழ்க்கை பாணியைத் திருத்தி அமைத்துக்கொள்வது, ஏற்புடைய மருந்து ஆகிய பல தரப்பட்ட அம்சங்கள் தொடர்பிலும் அந்த ஏட்டில் விவரங்கள் இருக் கின்றன. நீரிழிவு நோய் ஏற்படக்கூடிய நிலையில் இருப்பவர்கள் உடல் நலத்துக்கு ஏற்ற உணவை உட் கொள்ளவேண்டும் என்பது அவ சியமானது.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

‘ஸ்டூண்ட்- ரன் பார்க்’ நடவடிக்கையில் சுமார் 40 மாணவர்கள் ஈடுபட்டனர். வகுப்பில் கற்றவற்றை நடைமுறைப்படுத்திப் பார்த்ததுடன் பல்வேறு புதுமைகளையும் அவர்கள் கையாண்டனர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

13 Nov 2019

மாணவர்கள் நிர்வகிக்கும் பூங்கா திட்டம் விரிவடைகிறது

ஜூரோங்கில் உள்ள ஜாலான் டெருசனில் வீசப்பட்ட பொருட்கள். படம்: தேசிய சுற்றுப்புற வாரியம்

13 Nov 2019

பொது இடத்தில் சாமான்களை வீசியவருக்கு $9,000 அபராதம்