சிங்கப்பூர்- புருணை $50 நினைவு நாணய நோட்டுகள் வெளியீடு

சிங்கப்பூரும் புருணையும் S$50 மற்றும் B$50 நினைவு நாணய நோட்டுகளை வெளியிட்டு இருக் கின்றன. இந்த இரு நாடுகளுக்கும் இடையில் நாணய உடன்பாடு ஏற்பட்டு 50 ஆண்டுகள் ஆகின்றன. அதை நினைவுகூரும் வகையில் புதிய நோட்டுகள் வெளியிடப்பட்டு இருக்கின்றன. அந்த நோட்டுகளை பிரதமர் லீ சியன் லூங்கும் புருணை சுல்தான் போல்கியாவும் புதன்கிழமை வெளியிட்டனர். புருணை சுல்தான் இப்போது சிங்கப்பூரில் இருக்கிறார். இரு நாடுகளுக்கும் இடைப் பட்ட நாணய உடன்பாட்டின்கீழ் சிங்கப்பூர் நாணய ஆணையமும் புருணையின் ஏஎம்பிடி என்ற அமைப்பும் இரு நாடுகளின் நாணய நோட்டுகளையும் காசு களையும் ஏற்றுக்கொள்ளும். இரு நாடுகளின் நாணயங் களின் மதிப்பு ஒத்ததாக இருக் கும். ஆசியாவில் இத்தகைய உடன்பாடு வேறு எந்த நாட்டுக்கும் இடையில் இல்லை. சிங்கப்பூர்-புருணை நாணய உடன்பாட்டின் 50வது ஆண்டை கொண்டாடும் வகையில் இரு நாடுகளும் சேர்ந்து நாணய நோட்டை விநியோகிக்கும்.

சிங்கப்பூருக்கு வருகை அளித்து இருக்கும் புருணை சுல்தான் ஹசனல் போல்கியா நேற்று இஸ்தானாவில் சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங்குடன் (வலது) சேர்ந்து இரு நாடுகளின் நினைவு நாணய நோட்டுகளை வெளியிட்டார். படம்: தொடர்பு, தகவல் அமைச்சு