ஜி20 அமைப்புக்கு ஜி3 கோரிக்கை: வர்த்தக தடைகளை அகற்றுங்கள்

சிங்கப்பூர் உள்ளிட்ட சிறிய நாடு களை உள்ளடக்கிய உலக ஆளுமைக் குழு (3ஜி) என்ற ஓர் அமைப்பு, அனைத்துலக வர்த்தக முதலீட்டு ஒத்துழைப்பைப் பலப்படுத்தும்படி உலகின் பெரிய நாடுகளைக் கேட்டுக்கொண் டிருக்கிறது. தன்னைப்பேணித்தனத்தைக் குறைக்கும்படியும் தடைகளை அகற்றும்படியும் அந்த அமைப்பு வேண்டுகோள் விடுத்தது. ஜி20 என்ற அமைப்பின் தலைவர்கள் ஜெர்மனியில் ஹேம்பர்க் நகரில் இம்மாதம் 7, 8ஆம் தேதியும் உச்ச நிலை மாநாடு நடத்துகிறார்கள். இந்த வேளையில், 3ஜி நாடுகள் இவ்வாறு கோரிக்கை விடுத்திருக் கின்றன.

இந்த அமைப்பின் அறிக்கையை வெளியுறவு அமைச்சு நேற்று வெளியிட்டது. ஜி20 மாநாடு ஜெர்மனி தலைமைத்துவத்தின் கீழ் நடக்கிறது. மீட்சித்திறனைப் பலப்படுத்து வது, பொருளியல் வளங்களுடன் இயற்கை வளத்தையும் மேம்படுத்துவது, செய்யும் காரியத்துக்குப் பொறுப்பேற்பது ஆகிய மூன்று குறிக்கோள்களை நிறைவேற்றும் வகையில் ஜி20 மாநாடு நடக்கிறது. ஐநா மேம்பாட்டு நிகழ்ச்சி நிரலுக்கு உறுதுணையாகத் திகழ ஜி20 பல முயற்சிகளை எடுக்கிறது. இந்த முயற்சிகளுக்கு 3ஜி அமைப்பு ஆதரவு தெரிவித்தது. அனைத்துலக அளவில் ஒளிவு மறைவு இல்லாத, மீட்சித்திறன்மிக்க நிதித்துறை முறை முக்கியம் என்று 3ஜி அமைப்பு வலியுறுத் தியது. அர்ஜெண்டினாவில் நடக்க விருக்கும் 11வது உலக வர்த்தக அமைப்பின் அமைச்சர் நிலை மாநாட்டை ஜி20 அமைப்பு வெற்றி கரமான ஒன்றாக ஆக்குவதைக் காண தான் விரும்புவதாகவும் 3ஜி குறிப்பிட்டுள்ளது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon