சுடச் சுடச் செய்திகள்

அங்காடிக் கடை வாடகை கட்டுப்பட்டிருக்கும்

அங்காடிக் கடைகளின் வாடகைக் கட்டணம் கட்டுப்படுத்தப்பட்ட நிலையிலேயே இருந்து வரும் என்று சுற்றுப்புற, நீர்வள மூத்த துணை அமைச்சர் டாக்டர் ஏமி கோர் நாடாளுமன்றத்தில் செவ் வாய்க்கிழமை தெரிவித்தார். அண்மையில் ஓர் அங்காடிக் கடை $10,000 வாடகைக்குக் கேட்கப்பட்டது அசாதாரணமான சம்பவம் என்றாரவர். சமைத்த உணவை விற்பனை செய்யும் ஸ்டால் கடைகளுக்கான சராசரி ஏலக்குத்தகை வாடகைக் கட்ட ணம் கடந்த மூன்றாண்டுகளில் மாதம் $1,370 ஆக இருந்து வருகிறது. கடைகளுக்கு $1 முதல் $4,888 வரை பலரும் ஏலத்தில் கேட்கிறார்கள்.

மே மாத நிலவரப்படி அங்காடிக் கடைகளில் செயல்படும் 6,000க்கும் மேற்பட்ட சமைத்த உணவு ஸ்டால் கடை களில் சுமார் 97% எடுத்துக் கொள்ளப்பட்டுவிட்டன. இதே நிலவரம்தான் கடந்த ஐந்தாண்டு களாக நிலவி வருகின்றன. நிதி நெருக்கடியில் இருப் போருக்கு அங்காடிக் கடைகளை ஒதுக்கி தருவது என்ற பழைய கொள்கைகளை மறுபடியும் அமல் படுத்த தகுந்த காரணம் ஏதும் இல்லை என்று டாக்டர் கோர் குறிப்பிட்டார்.