ஆக்ஸ்லி ரோடு இல்ல விவகாரத்தில் புதிய திருப்பம்: தனிப்பட்ட முறையில் தீர்க்க முடிவு

சிங்கப்பூரின் முதல் பிரதமர் லீ குவான் இயூவின் ஆக்ஸ்லி ரோடு இல்லம் தொடர்பான பிரச்சினை யில் புதிய திருப்பம் ஏற்பட்டு உள்ளது. அவரது மூன்று பிள்ளை களுக்கு இடையிலான சச்சரவு நேற்று ஓரளவு முடிவுக்கு வந்தது. கடந்த மூன்று வாரங்களாக திரு லீ குவான் இயூவின் மூன்று பிள்ளைகளும் குற்றச்சாட்டுகளை யும் மறுப்பு அறிவிப்புகளையும் வெளியிட்டுவந்தனர். இந்நிலையில் பிரதமர் லீ சியன் லூங்கின் சகோதரர் லீ சியன் யாங்கும் சகோதரி லீ வெய் லிங் கும் பிரதமர் லீ சியன் லூங்கின் விருப்பத்திற்கு ஏற்ப தனிப்பட்ட முறையில் பிரச்சினையைத் தீர்த் துக்கொள்ள முன்வந்துள்ளனர்.

மேலும் பிரதமருக்கு எதிராக ஊடகங்களில் பதிவுகளை வெளி யிடுவதை நிறுத்தவும் இருவரும் சம்மதித்துள்ளனர். ஃபேஸ்புக்கில் நேற்று வெளி யிடப்பட்ட ஏழு பக்க கூட்டு அறிக் கையில் வழக்கறிஞர்கள் அல்லது அரசாங்க அமைப்புகள் தலையீடு இன்றி பேசத் தயாராக இருக்கி றோம் என்று திரு சியன் யாங்கும் டாக்டர் வெய் லிங்கும் குறிப்பிட் டனர்.

“தீராத பொதுப்படையான வாக்குவாதங்களால் சிங்கப் பூருக்கு சிக்கல் ஏற்படுவதை விரும்பவில்லை. இதனால் இப்போது முதல் சமூக ஊடகங்களில் மேலும் சான்றுகள் வெளியிடுவதை நிறுத்துகிறோம். அதே சமயத்தில் எங்களுடைய தந்தையின் விருப் பத்திற்கு எதி ராக எந்தவித தாக்குதலோ அல் லது சித்திரிக்கப் படுவதோ கூடாது,” என்று கூட்டு அறிக்கை தெரிவித்தது. கடந்த ஜூன் 14ஆம் தேதி எண் 38 ஆக்ஸ்லி ரோடு இல் லத்தை இடிக்க வேண்டும் என்ற தந்தையின் விருப்பத்தை பிரதமர் லீ தடுத்து அதன் மூலம் அரசியல் ஆதாயம் தேட முயற்சி செய்கிறார் என்று இருவரும் பொதுப்படையாக சமூக ஊடகத்தில் கருத்து களை வெளியிட்டனர்.

இந்த நோக்கத்தை நிறைவேற்று வதற்காக பிரதமர் லீ தமது அதி காரத்தைத் தவறாகப் பயன்படுத்து வதாகவும் அவர்கள் குற்றம் சாட் டினர். ஆனால் இந்தக் குற்றச்சாட்டு களை பிரதமர் வன்மையாக மறுத் திருந்தார். இவ்வாரம் நடைபெற்ற இரண்டு நாள் நாடாளுமன்றக் கூட்டத்திலும் தம் மீது சுமத்தப்பட்ட குற்றச் சாட்டுகளுக்கு பிரதமர் பதில் அளித்தார். இந்தப் பிரச்சினையில் உடன் பிறந்தவர்களுடன் இணக்கமான சூழ்நிலை ஏற்படும் என்றும் நாடா ளுமன்றத்தில் திரு லீ கூறியிருந் தார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon