மேல்முறையீட்டுக்குப் பின் உயர்ந்த தண்டனைக்காலம்

தமது நான்கு வயது மகனைக் கடுமையாகத் தாக்கி அவனது மரணத்துக்குக் காரணமாக இருந்த பெண்ணுக்கு முன்னதாக விதிக்கப்பட்டிருந்த எட்டு ஆண்டு சிறைத் தண்டனை மேல்முறையீட்டுக்குப் பிறகு பதினான்கரை ஆண்டுகளுக்கு உயர்த்தப்பட்டுள்ளது. 35 வயது நுராய்டா முகம்மது இயூசோஃப் தமது மகனின் தலையைத் தொடர்ச்சியாகத் தரையில் மோதி, அவனை மிதித்து, அவனது கழுத்தைப் பிடித்துத் தூக்கி சுவர் மீது தள்ளியதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. அந்தச் சிறுவனின் மண்டை ஓட்டில் ஏற்பட்ட முறிவாலும் மூளையில் ஏற்பட்ட ரத்தக் கசிவாலும் மரணம் அடைந்தான்.

மலாய் மொழியில் 11லிருந்து 18 வரை அந்தச் சிறுவன் ஒழுங்காகச் சொல்லாததால் நுராய்டா அவனைக் கொடுமைப்படுத் தினார். அவருக்கு விதிக்கப்பட்ட சிறைத் தண்டனையை உயர்த்த வேண்டும் என்ற நோக்குடன் அரசு தரப்பு வழக்கறிஞர்கள் மேல்முறையீடு செய்திருந்தனர்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

உரிமக் கட்டணங்களைத் தவிர்த்து, வைப்புத் தொகையாக சைக்கிள் ஒன்றுக்கு $30யை நிறுவனங்கள் செலுத்த வேண்டியிருந்தது. கோப்புப்படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

07 Dec 2019

பகிர்வு சைக்கிள் நிறுவனங்களுக்கான உரிமக் கட்டணம் பாதியாகக் குறைப்பு

கூகல் வரைபடத்திலிருந்து எடுக்கப்பட்டது.

07 Dec 2019

ராபின்சன் சாலையில் மூன்று தடங்கள் நாளை மூடப்படும்

இஸ்மாயில் காதர். கோப்புப்படம்: எஸ்டி

07 Dec 2019

தூக்கிலிருந்து தப்பித்த ஆடவருக்கு ஆறு ஆண்டு சிறை