தனியறைகள், இரு படுக்கையறைகள்: தாதிமை இல்லத்துக்கான திட்டம் புதுப்பிப்பு

ஒருவர் மட்டும் தங்கக்கூடிய தனியறைகள், இருவர் தங்கக் கூடிய அறைகள் ஆகியவற்றைக் கொண்டிருக்கும் தாதிமை இல்லத்துக்கான திட்டம் புதுப்பிக்கப்பட்டுள்ளது. இந்தத் தாதிமை இல்லத்தில் தங்கி சிகிச்சை பெறுபவர்களின் அந்தரங்கத்துக்கும் சுய உரிமைக்கு மதிப்பு கொடுக்கும் வகையில் மற்ற வசதிகளையும் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. அரசாங்க மானியத்தைப் பெற தவறியதால் இந்தத் திட்டம் முன்னதாகக் கைவிடப்பட்டி ருந்தது. ஆனால் நினைவிழப்பு நோயால் பாதிக்கப்பட்டிருப் போருக்காகக் கட்டப்படும் நான்கு மாடி தாதிமை இல்லமான ‘ஜேட் சர்க்கிள்’ 2019ஆம் ஆண்டு இறுதிக்குள் தயாராகி விடும் என்று எதிர்பார்க்கப்படு கிறது. சாங்கியில் தற்போது இருக்கும் ‘பீஸ்ஹேவன்’ தாதிமை இல்லத்தின் இணைக் கட்டடமாக ‘ஜேட் சர்க்கிள்’ கட்டப்படுகிறது. புதிய தாதிமை இல்லத்தைக் கட்ட 14 மில்லியன் வெள்ளி செலவாகும்.

லியேன் அறக்கட்டளையும் கூ சுவீ நியோ அறக்கட்டளையும் 9 மில்லியன் வெள்ளி வழங்கு கின்றன. மீதமுள்ள பணத்தை அரசாங்கம் வழங்குகிறது. புதிய தாதிமை இல்லத்தில் சிறப்பு படுக்கைகள் பயனபடுத்தப் படும். இந்தப் படுக்கைகளின் உயரத்தைக் குறைக்கலாம். இதன் மூலம் நோயாளிகள் கீழே விழும் சாத்தியத்தைக் குறைக்க லாம். அதுமட்டுமல்லாமல், நோயாளிகளின் நடமாட்டத்தைக் கண்காணிக்கும் சாதனங்களும் அந்தப் படுக்கைகளில் பொருத் தப்பட்டிருக்கும். ‘ஜேட் சர்க்கிள்’ தாதிமை இல்லத்தில் எட்டு தனியறைகளும் 7 இருபடுக்கை அறைகளும் இருக்கும்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon