முன்னாள் மனைவியைக் காயப்படுத்தியவருக்குச் சிறை

டாக்சியில் நடந்த வாக்குவாதத்தின் போது முன்னாள் கணவர் தன்னை அடித்ததால் பயந்துபோன மாது, உடனடியாக டாக்சியின் கதவைத் திறந்து வெளியே குதித்துவிட்டார். அவரைத் தொடர்ந்து, அவர்க ளது மகளும் வெளியில் குதித்து விட்டார். இச்சம்பவம் இவ்வாண்டு மே 27ஆம் தேதி சிலேத்தார் நார்த் லிங்க் சாலையில் நடந்தது. டாக்சி ஓட்டுநருக்கு வழிகாட் டும்படி தனது முன்னாள் கணவ ரான ஆஸ்திரிய நாட்டவர் ஜெர் ஹார்ட் ரெஸ்ச்-சிடம் கூறினார் 46 வயதாகும் திருவாட்டி டே சியூ நொய்.

வேலையில்லாத 46 வயது ரெஸ்ச் கோபமடைந்து திருவாட்டி டேயுடன் வாக்குவாதம் செய்ததாக வும் கணவராக மதித்து மரியாதை யுடன் நடந்துகொள்ளும்படி சொன் னதாகவும் அரசாங்கத் துணை வழக்குரைஞர் ஹுஸ்ட்டன் ஜொஹானஸ் நீதிமன்றத்தில் தெரி வித்தார். பிறகு அவர் திருவாட்டி டேயின் தலைமுடியைப் பிடித்து இழுத்து, இடது தோளை இறுக்கிப் பிடித்து, அவரது தலையை டாக்சி சன் னல்மீது இருமுறை மோதினார். திருவாட்டி டே அவரது பிடியிலி ருந்து தன்னை விடுவித்துக் கொண்டு, டாக்சியிலிருந்து வெளி யில் குதித்து விட்டார். அருகிலிருந்த சில வழிப்போக் கர்களை நோக்கி ஓடிச்சென்று நடந்தவற்றை அவர்களிடம் கூறி னார்.

அவர்களில் ஒருவர் போலி சாரை அழைத்தார். திருவாட்டி டேயின் இடது தோளில் சிறிய சிராய்ப்புக் காயமும் இடதுபக்கச் சரிவுத்தசையில் வலியும் இருந்தது. போலிஸ் காவலில் இருக்கும் ரெஸ்ச், திருவாட்டி டேயைக் காயப் படுத்திய இரு குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டார். குடும்ப நீதி மன்ற நீதிபதி 2015 டிசம்பர் 23ம் தேதி வழங்கிய தனிநபர் பாதுகாப்பு ஆணையை மீறியதாகவும் அவர் ஒப்புக்கொண்டார். இருவரும் சென்ற ஆண்டு தொடக்கத்தில் விவாகரத்து செய் தனர்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon