பேருந்து விபத்தில் ஓட்டுநருக்கு காயம்

சிராங்கூன் சென்ட்ரலை நோக்கிச் செல்லும் இயோ சூ காங் சாலையில் நேற்றுக் காலை நிகழ்ந்த விபத்தில் சிக்கிய எஸ்பிஎஸ் டிரான்சிட் ஈரடுக்குப் பேருந்து மோதலின் விளைவாக எதிர்திசையில் சென்று நின்றது. பேருந்து எதிர்திசையில் நின்றுகொண்டிருந்த காணொளி சமூக ஊடகத் தளங்களில் பரவியது. பேருந்தைச் சுற்றி போக்குவரத்து போலிஸ் மோட்டார் சைக்கிள்கள் நின்றுகொண்டிருந்தன. பேருந்தின் முன் கண்ணாடி நொறுங்கியிருந்ததுடன் பேருந்தின் முன்பக்க தடுப்பு இரும்பும் சேதமடைந்திருந்தது.

பல வாகனங்கள் சம்பந்தப்பட்ட இந்த விபத்து பற்றி தனக்கு காலை 10.07 மணிக்குத் தகவல் கிடைத்தது என்று கூறிய சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை, பேருந் தின் ஓட்டுநர் சுயநினைவுடன் டான் டோக் செங் மருத்துவ மனைக்குக் கொண்டு செல்லப்பட்டார் என்றும் கூறியது. போலிஸ் விசாரணை தொடர்கிறது.

விபத்தில் பேருந்தின் முன் கண்ணாடி நொறுங்கியது. படம்: ரோட்ஸ்.எஸ்ஜி

Loading...
Load next