‘இன ரீதியில் பயங்கரவாதத்தை அணுகக்கூடாது’

பயங்கரவாதிகள் என்றால் குறிப் பிட்ட இனத்தைச் சேர்ந்தவர் களாக இருப்பர் என்ற எண்ணமும் அணுகுமுறையும் தவறான ஒன்று என நேற்று நடைபெற்ற அனைத்துலக போலிஸ் மாநாடு, கண்காட்சியில் பயங்கரவாத எதிர்ப்பு நிபுணரான திரு யானிவ் பேரேட்ஸ் தெரிவித்துள்ளார். வெடிகுண்டுகளின் தோற்றம் இப்படித்தான் இருக்கும் என்றும் பயங்கரவாதிகள் இப்படித்தான் இருப்பர் என்றும் சில பாதுகாப்பு அதிகாரிகள் கருதுவதாக பாது காப்பு நிபுணர்களுக்குப் பயிற்சி வழங்கும் அமைப்பு ஒன்றின் திட்ட இயக்குநரான திரு பேரேட்ஸ் குறிப்பிட்டார். எனவே, பயங்கரவாதத்தை இன ரீதியாக அணுகுவது தவறு என்பதை அவர் வலியுறுத்தினார்.

ஒரு சுற்றுச்சூழலின் வழக்க நிலையை நன்கு அறிந்து வழக்கத்துக்கு மாறாக ஏதேனும் நிகழும்போது விழிப்படைந்து நடவடிக்கை எடுப்பது முக்கியம் என்றார் அவர். சமுதாயத்தில் உள்ள அனைவரும் வழக்கத்துக்கு மாறான நிகழ்வுகளை அடை யாளம் கண்டு விழிப்புடன் இருக்கவேண்டும் என்று திரு பேரேட்ஸ் கேட்டுக்கொண்டார். கடந்த சில ஆண்டுகளில் ஒருங்கிணைக்கப்பட்டு பெரிய அளவில் நடத்தப்பட்ட பயங்கர வாதத் தாக்குதல்களுக்குப் பிறகு தனிநபர்களால் நடத்தப்படும் தாக்குதல்களும் நிகழ்வதை பாதுகாப்பு நிபுணர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர். இணையம் மூலம் கிடைக்கும் தகவல்களைக் கொண்டு குறுகிய காலகட்டத்தில் தீவிரவாதப் போக்கைத் தழுவிக்கொள்பவர் களால் இந்தத் தாக்குதல் நடத்தப்படுவதாகக் கூறப்படு கிறது.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

தற்போது ரயில் நிலையங்களில் உள்ள வரைபடத்துக்குப் பதிலாக இந்தப் புதிய படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்திலிருந்து மாற்றப்படும் என்றது ஆணையம். படம்: நிலப் போக்குவரத்து ஆணையம்

11 Dec 2019

தாம்சன்-ஈஸ்ட் கோஸ்ட் ரயில் பாதை ஜனவரியில் திறப்பு; முதல் 3 நாட்களுக்கு இலவச பயணம்

காலை 10 மணியளவில் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு பகல் 12 மணியளவில் முற்றாக அணைக்கப்பட்டதாக எஸ்சிடிஎஃப் தெரிவித்தது. படங்கள்: எஸ்சிடிஎஃப் /ஃபேஸ்புக்

11 Dec 2019

துவாஸில் ஆறு மணி நேரம் பற்றி எரிந்த தீ

தான் வேண்டுமென்றேதான் மைனாவைத் தொங்கவிட்டதாகவும் இப்படிச் செய்தால் தன் சமையலறைக்குள்  வரக்கூடாது என்று மற்ற மைனாக்களுக்கும் தெரிய வரும் என்றும் கருதுவதாக அந்த மாது தன் செயலுக்கு விளக்கம் அளித்திருந்தார். படம், காணொளி: ஏக்கர்ஸ் ஃபேஸ்புக்

11 Dec 2019

மைனாவுக்குப் பாடம் புகட்ட எண்ணி அதை சன்னலுக்கு வெளியே தொங்கவிட்ட குடியிருப்பாளர்