புதிய குழந்தை பராமரிப்பு திட்டத்துக்கு ஆள்சேர்ப்பு

குழந்தை பராமரிப்பு ஊழியர் களுடன் சேர்ந்து குழந்தைகளைப் பார்த்துக்கொள்வதில் பயிற்சி பெறும் திட்டத்தில் ஏறத்தாழ முப்பது பேர் இணைந்துள்ளனர். இந்தத் திட்டம் கடந்த மார்ச் மாதம் அறிவிக்கப்பட்டது. திட்டத் தின்கீழ் துணைக் குழந்தை பராமரிப்பாளர்கள் ஏட்டுக்கல்வி யைவிட செயல்முறையில் அதிகக் கவனம் செலுத்துவர். இந்தத் தகவலை சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சர் டான் சுவான் ஜின் நேற்று வெளியிட்டார். பாலர் கல்வித் துறைக்காக பொங்கோலில் உள்ள வாட்டர்வே கடைத்தொகுதியில் நடைபெற்ற வேலைச் சந்தையை அவர் நேற்று பார்வையிட்டார்.

இந்தப் புதிய திட்டம் பாலர் கல்வி மேம்பாட்டு வாரியத்தால் நிர்வகிக்கப்படுகிறது. குழந்தை களுடன் நன்கு பழகுவதில் இயல் பான திறன் கொண்டோருக்கு இந்தத் திட்டம் அறிமுகப்படுத் தப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் நீண்டநாள் வகுப்பறை பயிற்சிகள் நடத்தப்படமாட்டாது. அதுமட்டுமல் லாமல், இதில் சேர கல்வித் தகுதி ஏதும் கேட்கப்படமாட்டாது. கடந்த மார்ச் மாத இறுதியில் அறிமுகமான இந்தத் திட்டத்தின் வாயிலாக 2020ஆம் ஆண்டுக்குள் மேலும் 1,000 குழந்தை பராமரிப் பாளர்களை ஈர்க்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இந்தக் குழந்தை பராமரிப்பாளர் கள் இரண்டு மாதக் குழந்தை களிலிருந்து 18 மாதம் வரை யிலான குழந்தைகளைப் பார்த்துக் கொள்ளவேண்டும்.