முன்னாள் கைதிகளின் மறுவாழ்வுக்கு குடும்ப ஆதரவு முக்கியம்

முஹம்மது ஃபைரோஸ்

முன்னாள் குற்றவாளிகள் தங்கள் சிறைத் தண்டனையை நிறை வேற்றியதுடன் சமூகத்தில் மீண்டும் ஒருங்கிணைவதில் பல் வேறு சவால்களை எதிர்நோக்கக் கூடும். இந்நிலையில், அவர் களுக்கு மன உறுதியையும் ஊக்கத்தையும் தருவதில் அவர் களின் குடும்ப உறுப்பினர்களுக்கு முக்கிய பங்குண்டு என்று பிரதமர் அலுவலக அமைச்சர் சான் சுன் சிங் தெரிவித்துள்ளார். இந்த முயற்சியில் முன்னாள் குற்றவாளிகளின் குடும்ப உறுப் பினர்களுக்குக் கைகொடுக்க சமூகத்தின் பலதரப்பட்ட பங்கு தாரர்கள் முன்வரவேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார். அவ்வகையில், சிறைக்குச் சென்ற குற்றவாளிகளின் இழப்பை ஏற்றுக்கொள்ள இயலாமல் தவித்துக் கொண்டிருக்கும் குடும் பங்களின் இல்லத்திற்குச் சென்று அவர்களுக்குத் தேவைப்படும் ஆதரவு அனைத்தையும் வழங்கி வரும் அடித்தளத் தொண்டூழியர் களின் பங்கு குறித்தும் அமைச்சர் சான் பேசினார்.

சிங்கப்பூர் எக்ஸ்போவில் நேற்று நடைபெற்ற மஞ்சள் நாடா சமூகத் திட்ட விருது நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட அவர் இதனைத் தெரி வித்தார். “முன்னாள் குற்றவாளிகள் மீண்டும் குற்றம் புரியாமல் இருப்பதை உறுதிசெய்வதில் ஒட்டுமொத்த சமூகமும் பங்காற்ற வேண்டும். அதுவும், முன்னாள் குற்றவாளிகளின் பிள்ளைகள், உடன்பிறப்புகள் போன்ற அடுத்த தலைமுறையினர் அந்த வலைக் குள் சிக்கிவிடாமல் தவிர்ப்பது அதைவிட முக்கிய பணி,” என்றார் அவர்.

(இடமிருந்து வலம்) தொண்டூழியம் செய்யும் முன்னாள் கைதி திரு ஜோ டேனியல் ஆஸ்டின், சிறை அதிகாரி டிஎஸ்பி ஜானத்தன் லின், திரு யூசோஃப் அப்துல் லத்தீஃப். படம்: சிங்கப்பூர் சிறைச்சாலை துறை

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon