முன்னாள் கைதிகளுக்கு 4,500 பேர் ஆதரவு

முன்னாள் கைதிகளுக்கு ஆதரவு காட்டும் வகையில் ‘அன்லேபல்ட்’ ஓட்டத்தில் 4,500 பேர் நேற்று பங்கெடுத்தனர். இந்த ஓட்டம் இரண்டாவது முறையாக லாப நோக்கமற்ற அமைப்பான தி நியூ சாரிஸ் மிஷனால் நடத்தப்பட்டது. ஓட்டத்தில் பங்கேற்ற 500 பேரில் முன்னாள் கைதிகளும் அவர்களது குடும்பத்தாரும் அடங்குவர். முன்னாள் கைதிகள் சமூகத்தின் நலனுக்காகப் பங் காற்றி வருவது தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்தில் தி நியூ சாரிஸ் மிஷன் அமைப்பின் நிர்வாக இயக்குநர் டோன் வோங் இந்த ஓட்டத்தைக் கடந்த ஆண்டு தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் இரண்டாம் உள்துறை அமைச்சர் டெஸ்மண்ட் லீயும் கலந்துகொண்டார். “நாம் அனைவரும் தவறுகள் செய்வதுண்டு என்பதை நினைவில் கொள்ளவேண்டும்,” என்பதை அமைச்சர் வலியுறுத்தினார். மன்னித்து ஏற்றுக்கொள்ளும் உணர்வால் கூடுதல் வலிமையுள்ள சமுதாயத்தை சிங்கப்பூரால் உரு வாக்க முடியும் என்று அவர் கூறினார்.

முன்னாள் கைதிகள் சமுதாயத் தில் மீண்டும் இணைய அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைகள் மட்டும் போதாது என்றும் பொதுமக்களும் கூடுதல் ஆதரவு தரவேண்டும் என்றும் அமைச்சர் தெரிவித்தார். “முன்னாள் கைதிகள் முழுமையாகத் திருந்தி வரும் பட்சத்தில் அவர்களை முதலாளி கள் வேலையில் அமர்த்த தயாராக இருக்கவேண்டும்,” என்று திரு டெஸ்மண்ட் லீ கூறினார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon