‘புத்திசாலியாக மட்டும் இல்லாமல் பண்பட்டவராகவும் இருக்கவேண்டும்’

புத்திசாலித்தனமாக இருந்தால் மட்டும் போதாது, பண்பட்ட வராகவும் இருக்கவேண்டும் என்று முன்னாள் தலைமைச் சட்ட அதிகாரி திரு வி.கே. ராஜா வழக்கறிஞர்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார். இந்தக் கோரிக்கையை அவர் நேற்று காலை சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகச் சட்டத்துறைப் பட்டதாரிகளிடம் முன்வைத்தார். “விவேகமுள்ள, நல்லுள்ளம் கொண்ட வழக்கறிஞர்களாக இருக்க முயற்சி செய்யுங்கள். சிங்கப்பூரில் கெட்டிக்காரர்கள் பலர் இருக்கிறார்கள். ஆனால் பண்பட்டவர்கள் போதுமான அளவுக்கு இல்லை,” என்று திரு ராஜா கூறினார். திரு ராஜா கடந்த ஜனவரி மாதத்தில் தலைமைச் சட்ட அதிகாரி பதவியிலிருந்து விலகினார்.

தலைமைச் சட்ட அதிகாரியாகப் பொறுப்பு வகிப் பதற்கு முன்பு மேல்முறையீட்டு நீதிபதியாகவும் உயர் நீதிமன்ற நீதிபதியாகவும் சட்ட நிறுவனமான ‘ராஜா அண்ட் டானின்’ நிர்வாகப் பங்காளியாகவும் இருந்தார். சிங்கப்பூர் தேசிய பல்கலைக் கழக சட்டத் துறையின் 60வது ஆண்டு விழாவில் பேசிய திரு ராஜா, இளம் வழக்கறிஞர்கள் பலர் ஏற்கெனவே முத்திரை பதித்த வழக்கறிஞர்கள் எப்படி நடந்து கொள்கிறார்களோ அதே போன்று நடந்துகொள்ள விரும்புவதாகத் தெரிவித்தார். இந்த மனப்போக்கைத் தவிர்க் கும்படி அவர் கேட்டுக்கொண்டார்.

“நீங்கள் நீங்களாகவே இருங்கள். போட்டித்தன்மையைத் தழுவிக்கொள்ளுங்கள்,” என்று திரு ராஜா இளம் வழக்கறிஞர் களிடம் வலியுறத்தியுள்ளார். சிங்கப்பூரின் முதல் சட்டப் பள்ளி தொடங்கி பல ஆண்டு களாகிவிட்ட நிலையில் அனைத் துலகப் போட்டித்தன்மையிலிருந்து தங்களைப் பாதுகாக்கும்படி சிங்கப்பூர் வழக்கறிஞர்கள் இன்னமும் மன்றாடினால் அது வேதனைக்குரிய விஷயமாகும் என்று திரு ராஜா தெரிவித்தார். அதுமட்டுமல்லாமல், கட்டண இலக்கு, லாபம், இழப்பீடு ஆகியவற்றுக்கு அப்பாற்பட்டு வழக்கஞர்கள் செயலாற்ற வேண்டும் என்று திரு ராஜா கூறினார்.

விபத்தால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல். படம்: ‌ஷின் மின்