ஆணையம்: இரவில் ஒளிரும் முகப்பூச்சு நல்லதல்ல

‘குளோ குளோயிங் ஸ்கின்கேர் 4-1’ என்று அழைக்கப்படும் தோல் பராமரிப்பு அழகுப்பொருள் தொகுப்பில் உள்ள நான்கில் இரண்டில் அளவுக்கு அதிகமாக பாதரசம் கலந்துள்ளதால் அவற்றை வாங்கி, பயன்படுத்த வேண்டாம் என்று சுகாதார அறிவியல் ஆணையம் நேற்று எச்சரித்தது. நான்கு பொருட்களில் ‘நைட் குளோயிங்’ (Night Glowing) களிம்பும் ஒன்று. இதில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட 25,000 மடங்குக்கு மேல் பாதரசம் கலந்துள்ளது என்று கூறிய ஆணையம், இதனால் கடுமையான சுகாதாரக் கேடு ஏற்படும் என்று கூறியது. இதே தொகுப்பில் உள்ள மற் றொரு அழகுப் பொருளான ‘நைட் குளோ’ (Night Glow) களிம்பிலும் தடை செய்யப்பட்ட ரசாயனப் பொருட்கள் கலந்திருப் பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

முகத்தை உடனே வெண் மையாக்கிவிடுகிறது என்று பொது மக்கள் கூறியதால் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து அளவுக்கு அதிகமாக பாதரசமும் தடை செய்யப்பட்ட ரசாயனப் பொருட் களும் களிம்புகளில் கலந்துள்ள விவரம் தெரியவந்தது என்று ஆணையம் குறிப்பிட்டது. ‘நைட் குளோயிங்’, ‘நைட் குளோ’ ஆகிய இரண்டு முகப் பூச்சுகளும் பல்வேறு இணையத் தளங்கள் வழியாக விற்கப்படு கின்றன. இது, தோலை பிரகாசமாகவும் வெண்மையாகவும் ஆக்குகிறது என்றும் முகப்பருக்களை குறைக்க உதவுகிறது என்றும் விளம்பரப்படுத்தப்படுகிறது. நான்கு அழகுப்பொருட்களில் இரண்டு மட்டுமே கேடு விளை விக்கக்கூடியதாக இருந்தாலும் நான்கு பொருட்களையும் வாடிக் கையாளர்கள் தவிர்ப்பது நல்லது என்று ஆணையம் அறிவுறுத் தியது.

இந்த ஒளிரும் முகப்பூச்சு பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று சுகாதார அறிவியல் ஆணையம் எச்சரித்துள்ளது. படம்: எச்எஸ்ஏ