இணையப் பாதுகாப்புப் பயிற்சியில் தகவல் கட்டமைப்புத் துறைகள்

முதல்முறையாக சிங்கப்பூரின் அனைத்து முக்கிய தகவல் கட்டமைப்புத் துறைகளையும் சேர்ந்த 200க்கும் மேற்பட்டோர் நேற்று இணைய பாதுகாப்புப் பயிற்சி ஒன்றில் கலந்துகொண் டனர். சிங்கப்பூர் இணையப் பாதுகாப்பு ஆணையம் நடத்திய ‘எக்சர்சைஸ் சைபர் ஸ்டார்’ பயிற்சி சிங்கப்பூரின் இணைய பாதுகாப்பு நிர்வாகம், அவசர காலத் திட்டங்கள் ஆகியவற்றைச் சோதிக்கும் முழு அரசாங்க முயற்சியாக அமைந்தது. இப்பயிற்சியில் சிங்கப்பூரின் இணையப் பாதுகாப்புக் கட்டமைப் புக்குப் பொறுப்பு வகிக்கும் 11 சி11 துறைகளும் இப்பயிற்சியில் பங்கேற்றன.

கடந்த ஆண்டு முதல்முறையாக நடத்தப்பட்ட இத்தகைய பயிற்சியில் நிதித் துறை ஆகியவற்றுடன் அரசு, எரிசக்தி, தகவல் தொடர்பு ஆகிய துறைகள் கலந்து கொண்டன. இவ்வாண்டின் பயிற்சியில் விமானத் துறை, சுகாதாரத் துறை, நிலப் போக்குவரத்து, கப்பல் துறை, ஊடகத் துறை, பாதுகாப்புத் துறை, பாதுகாப்பு அவசரகாலத் துறை, நீர்த் துறை ஆகியவை கலந்துகொண்டன. அரசு, தனியார் நிறுவனங் களைச் சேர்ந்த இந்த அமைப்புகள் பாவனைப் பயிற்சி, பட்டறைகள், கலந்துரையாடல்கள் ஆகிய நடவடிக்கைகளில் பங்கேற்றன. துணைப் பிரதமரும் தேசிய பாதுகாப்பு ஒருங்கிணைப்பு அமைச்சருமான டியோ சீ ஹியன், தொடர்பு, தகவல் அமைச்சரும் இணைய பாதுகாப்புக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சரு மான டாக்டர் யாக்கூப் இப்ராஹிம், கல்வி; தொடர்பு, தகவல் மூத்த துணை அமைச்சர் டாக்டர் ஜனில் புதுச்சேரி ஆகியோரின் முன்னிலையில் இந்த பயிற்சி நடத்தப்பட்டது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon