புதிய அரசாங்க சேவைத் தலைவராகும் லியோ யிப்

அரசாங்க சேவைத் தலைவர், பிரதமர் அலுவலகத்தின் நிரந்தரச் செயலாளர் பொறுப்புகளிலிருந்து திரு பீட்டர் வோங் செப்டம்பர் 1ஆம் தேதி ஓய்வுபெறுகிறார். திரு பீட்டர் வோங்கின் பொறுப்புகளை 53 வயது திரு லியோ யிப் ஏற்பார் என்று பொதுச் சேவைப் பிரிவு நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது. தற்போது உள்துறை அமைச் சின் நிரந்தரச் செயலாளராக இருக்கும் திரு யிப் செப்டம்பர் 1ஆம் தேதியில் அந்தப் பதவியைக் கைவிடுவார்.

திரு யிப் தேசிய பாதுகாப்பு, உளவுத் துறை ஒருங்கிணைப் புக்கான நிரந்தரச் செயலாளராகவும் பிரதமர் அலுவலகத் தொடர்பு பிரிவை மேற்பார்வையிடும் பிரதமர் அலுவலகத்தின் நிரந்தரச் செய லாளராகவும் தொடர்ந்து செயல் படுவார். 56 வயது திரு பீட்டர் வோங் 31 ஆண்டுகளுக்கு அரசாங்க சேவையில் பணியாற்றியுள்ளார். போக்குவரத்து, நிதி, வர்த்தகம் தொழில் உட்பட தாம் வகித்த பல்வேறு நிரந்தரச் செயலாளர் பதவிகளில் பெருமைப்படும் அளவுக்கு அவர் நிறைவேற்றினார். “பொதுச் சேவைத் துறை தலைவராக திரு பீட்டர், பொதுச் சேவையை புத்தாக்கக் கலாசாரத்தை நோக்கி வழிநடத்தி, துணிவான புத்தாக்க பொதுச் சேவையைக் கட்டி வளர்த்தார்,” என்று பொதுச் சேவைத் துறைக்கான அமைச்சரான துணைப் பிரதமர் டியோ சீ ஹியன் குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் அலுவலகத்தின் நிரந்தரச் செயலாளர் பதவியிலிருந்து ஓய்வுபெறும் திரு பீட்டர் ஓங் (வலது). அவருக்குப் பதிலாகத் திரு லியோ யிப் (இடது) அந்தப் பொறுப்பை ஏற்கிறார். படம்: பொது சேவைப் பிரிவு

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon