மேம்பால விபத்து; சோதனைக்கு காங்கிரீட் பாளங்கள் சேகரிப்பு

கட்டி முடிக்கப்படாத மேம்பாலம் இடிந்துவிழுந்த சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வரும் வேளையில் நேற்று சோதனைக்கு காங்கிரிட் பாளங்களை அதி காரிகள் சேகரித்தனர். அரைகுறையாக இருந்த பாலம் ஏன் விழுந்தது என்பது குறித்து விசாரித்துவரும் கட்டட, கட்டுமான ஆணையத்துக்கு இந்தப்பாளங்கள் தேவைப்படும் என்று அறியப்படுகிறது. இந்தச்சோதனையில் கலவை யின் தரம், பாலம் வடிவமைக்கப் பட்டவிதம் உட்பட பல அம்சங்கள் நிர்ணயம் செய்யப்படும்.

கட்டட ஒப்பந்ததாரர்கள் செலவைக் குறைப்பதற்காக தரம் குறைந்த கலவையைப் பயன்படுத்தியிருந் தால் வடிவமைப்பு பலவீனமடைய வாய்ப்பு உள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை விடியற்காலை சாங்கியில் உள்ள நெடுஞ்சாலை யில் கட்டி முடிக்கப்படாத மேம் பாலம் சரிந்துவிழுந்தது. இந்தச் சூழ்நிலையில் நேற்று கட்டுமானத் தளத்தில் ஊழியர்கள் இடிந்த பாகத்தின் இரு முனைகளிலும் துளையிட்டுக் கொண்டிருந்த தைக் காண முடிந்தது.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

தலையை வேனில் மோதியதால் குழந்தை இறந்திருக்கலாம் என்று கூறப்பட்டது. படம்: ஃபேஸ்புக்

12 Nov 2019

தலையை காரில் மோதியதில் குழந்தை உயிரிழப்பு; தாயின் ஆண் நண்பர்மீது குற்றச்சாட்டு

சிங்கப்பூர் நாணய ஆணைய பசுமை செயல்திட்டத்தின் பல புதிய முயற்சிகளை நேற்று தொடங்கி வைத்துப் பேசினார் கல்வி அமைச்சர் ஓங் யி காங் . படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

12 Nov 2019

பருவநிலை பசுமை திட்டங்களுக்கு US$2 பில்லியன் முதலீடு

கூடுதல் வசதிகளுடன் கூடிய புதிய மின்சாரப் பேருந்துகள். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

12 Nov 2019

அடுத்த ஆண்டு துவக்கத்திலிருந்து 60 மின்சாரப் பேருந்துகள்