திருமணக் கூட்டத்தில் ரப்பர் குண்டுகளால் சுட்ட ஆடவர் கைது

உட்லண்ட்ஸில் இந்த மாதத் தொடக்கத்தில் நடந்த ஒரு மணவிழாக் கொண்டாட்டத்தில் ரப்பர் குண்டுகளால் சுட்ட 49 வயது ஆடவர் ஒருவரை போலிஸ் நேற்று கைது செய்தது. இந்தச் சம்பவம் ஜூலை 1ஆம் தேதி காலை 7 மணிக்கு உட்லண்ட்ஸ் அவென்யூ 6ல் உள்ள புளோக் 762ல் நடந்தது. கைதுசெய்யப்பட்ட அந்த ஆடவர் உட்லண்ட்ஸ் அவென்யூ 6ல் வசித்து வருகிறார். புளோக் 764ஏயில் உள்ள அவரது வீட்டில் போலிசார் அவரிடம் விசாரணை நடத்தினர். சாமுவல் டான் ஜூ சூன் என்ற அந்த ஆடவர், கவைக்கொம்பின் உதவி யால் அந்த ரப்பர் குண்டுகளால் திருமணக் கூட்டத்தினர் மீது சுட்டார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. அவரால் சுடப்பட்ட அந்த ரப்பர் குண்டுகள், மணமகளை ஏற்றிச் செல்ல வந்திருந்த அலங்காரம் செய்யப் பட்ட வாகனத்தைத் தாக்கின. அத்துடன் ரப்பர் குண்டு தாக்குத லில் ஒருவர் காயமடைந்தார்.

அந்த ஆடவரை சம்பவ இடத் திற்கு அழைத்துச்சென்று போலிசார் விசாரணை மேற்கொண்டனர். பெயர் வெளியிட விரும்பாத சாமுவலின் அண்டை வீட்டுக்காரர் ஒருவர், அந்த ஆடவருக்கு மனைவியும் 10 வயது மகளும் இருப்பதாகக் கூறினார். அவர் கடந்த ஐந்து, ஆறு ஆண்டுகளாக எந்த வேலைக்கும் செல்வதுபோல் தெரியவில்லை என்று அவர் கூறினார். இருப் பினும் அவர் மிகவும் நட்பார்ந்த மனிதன் என்று கூறினார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon