குறைவான டாக்சி கட்டணம்; ஒன்பதாவது இடத்தில் சிங்கப்பூர்

குறைந்த தூரம் செல்வதற்கான டாக்சி கட்டணம் குறித்து ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது. பிரிட்டனைச் சேர்ந்த அந்த ஆய்வு நிறுவனம் நடத்திய ஆய்வின் மூலம் ஆசிய நாடுகளில் குறைந்த தூரத்திற்கு குறைவான டாக்சிக் கட்டணத்தைக் கொண்டுள்ள நாடுகளில் சிங்கப்பூர் ஒன்பதாவது இடத்தில் உள்ளது தெரியவந்துள்ளது. முதல் இடத்தில் பேங்காக்கும் இரண்டாவது இடத்தில் ஜகார்த்தாவும் மூன்றாவது இடத்தில் மும்பையும் உள்ளன. உலக அளவில் 80 நகரங்களின் வரிசையில் சிங்கப்பூர் 20வது இடத்தைப் பிடித்துள்ளது. உலகில் ஆகக் குறைவான டாக்சி கட்டணம் உள்ள நகரம் கெய்ரோ. அங்கு 0.3 கிலோ மீட்டருக்கு 55 காசுகள் மட்டுமே செலுத்தப்படுகிறது. ஆக அதிகக் கட்டணம் வசூலிக்கும் நகரமாக சூரிச் உள்ளது என ஆய்வில் தெரியவந்துள்ளது.

Loading...
Load next