சுடச் சுடச் செய்திகள்

விவியன்: சிங்கப்பூர்- இலங்கை நல்லுறவு வலுவடைந்துள்ளது

இலங்கைக்கு மூன்று நாள் அதி காரத்துவ பயணம் மேற்கொண் டுள்ள வெளியுறவு அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன் நேற்று யாழ்ப்பாணம் சென்றிருந் தார். யாழ்ப்பாணப் பல்கலைக் கழ கத் தில் சிங்கப்பூர் லீ அற நிறுவனத்தின் சிங்ஹெல்த் எலும்பியல் மேம்பாட் டுத் திட்டத்தை நேற்று அவர் அதிகாரபூர்வமாகத் தொடங்கி வைத்தார். யாழ்ப்பாணப் பயிற்சி மருத்துவமனைக்கும் வருகை புரிந்த அவர், சிங்கப்பூரின் சிங் ஹெல்த் நிறுவனத்தின் திட்டம் ஒன்றின் மூலம் அம்மருத்துவமனை யில் சிங்கப்பூர் மருத்துவர்களால் எலும்பியல் சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகளையும் அமைச்சர் சந்தித்துப் பேசினார்.

இந்த மூன்றாண்டு ஆதரவுத் திட்டத்தின் கீழ் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், யாழ்ப்பாண பயிற்சி மருத்துவமனை ஊழியர்களுக்கு மருத்துவ, தாதிமை, இயன்மருத்துவ சிகிச்சை கல்வி, பயிற்சிகளை சிங்ஹெல்த் தொடங்கியுள்ளது. வட மாநிலத்தின் முதலமைச்சர் விக்னேஸ்வரையும் அமைச்சர் விவியன் சந்தித்துப் பேசினார். யாழ்ப்பாணம் பொது நூலகத்திற் கும் வருகையளித்த அமைச்சர் விவியன், அந்நூலகத்தில் சிங் கப்பூரின் ஆதரவுடன் உருவாக்கப் பட்டுள்ள சிறார் பிரிவுக்கு சிங் கப்பூர் தேசிய நூலகம் நன் கொடையாகக் கொடுத்த 500 புத்தகங்களை வழங்கினார்.

வெளியுறவு அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன் யாழ்ப்பாண பொது நூலகத்தின் தலைமை நூலகர் திருமதி சதாசிவமூர்த்தியிடம் தேசிய நூலக வாரியம் அளித்த நூல்களை அளிக்கிறார். பின்னால் இருப்பவர் இலங்கைக்கான சிங்கப்பூர் தூதரும் தமிழ் முரசின் தலைவருமான எஸ்.சந்திரதாஸ். படம்: வெளியுறவு அமைச்சு

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon