பாசிர் பாஞ்சாங்கில் பேருந்துடன் 4 மோட்டார் சைக்கிள்கள் மோதல்

தீவு விரைவுச்சாலையில் கட்டப்பட்டு வந்த மேம்பாலச் சாலை இடிந்து விழுந்ததில் காயமடைந்த ஊழியர் ஒருவரின் நிலைமை மோசமடைந்துள்ளது. சீன நாட்டு ஊழியரான 49 வயது திரு கா லிகுனி தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளதாகவும் அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படுவதாக ஓர் கிம் பியோவ் கன்ட்ராக்டர்ஸ் கட்டுமான நிறுவனம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது ஜூலை 14ஆம் தேதி நடந்த இந்த விபத்தில் ஒருவர் கொல்லப்பட்டார். இப்போது மோசமான நிலையில் கா லிகுனியுடன் சேர்த்து 9 பேர் காயமடைந்து சாங்கி பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தனர். அவர்களில் பங்ளாதேஷை சேர்ந்த ஊழியர் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்து சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளார்.