சுடச் சுடச் செய்திகள்

மது அருந்தியவாறு பேருந்து ஓட்டியவருக்கு 15 மாதச் சிறை

பயணிகள் நிறைந்திருந்த பேருந்தை ஓட்டிக்கொண்டே வொட்கா மதுபானம் பருகிய எஸ்பிஎஸ் பேருந்து ஓட்டுநருக்கு நேற்று 15 மாதச் சிறைத் தண்டனையும் $1,000 அபராத மும் விதிக்கப்பட் டது. அதோடு, 27 வயது நஜிபுல்லா ராஜா சலீமுக்கு (படம்) 10 ஆண்டுகளுக்கு வாகனம் ஓட்டத் தடையும் விதிக்கப்பட்டது. சென்ற ஆண்டு ஜூன் 29ம் தேதி மாலை 4.15 மணியிலிருந்து, பேருந்து சேவை 162=ஐ அவர் குடிபோதையில் ஓட்டியதாகவும், கண்மூடித்தனமாக ஓட்டிய தாகவும், கைத்தொலைபேசியைப் பயன்படுத்தியதாகவும் மூன்று குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந் தன.

அக்குற்றங்களை அவர் புரிந்ததாக முன்னதாக நீதி மன்றத்தில் தீர்ப்பளிக்கப்பட்டது. எஸ்பிஎஸ் டிரான்சிட் நிறுவனம் அவரை வேலையி லிருந்து நீக்கிவிட்டது. பேருந்திலிருந்த பயணிகள் ஓட்டுநரை நம்பியிருந்ததால் அவர் களது உயிர் அவரது கையில் இருந்ததாக நஜிபுல் லாவுக் குத் தீர்ப்பளித்த மாவட்ட நீதிபதி கென்னத் யாப் கூறினார். எனவே, நஜிபுல்லாவின் நடத்தை “மிகவும் பொறுப்பற்றது, அக் கறையற்றது” என்று அவர் குறிப்பிட்டார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon