புதிய ‘ஒன்மேப்’ செயலியைப் பயன்படுத்த நிறுவனங்களுக்கு நில ஆணையம் வலியுறுத்து

ரயில் சேவை தடை போன்ற நெருக்கடியான காலகட்டத்தில் பொதுமக்கள் நேரம் தவறாமல் பணிக்குச் செல்லுவதற்கு மாற்று வழிகளைத் தேடக்கூடும். இதுபோன்ற தீர்வுகாணப்படாத பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண நிறுவனங்கள், ‘ஒன்மேப்’ என்றழைக்கப்படும் செயலி மூலம் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த முன்வரவேண்டும். ‘ஒன்மேப்’ என்னும் செயலி என்பது அரசாங்க முகவை களுக்கான ஒருங்கிணைக்கப்பட்ட வரையறையைக் கொண்ட ஒரு கட்டமைப்பு முறை. இடம்சார்ந்த தரவுத் தகவல்க ளையும் சேவைகளையும் அறிந்து கொள்ளப் பயன்படும் இந்த முறையை நிறுவனங் களும் பயன் படுத்தி தொழில்நுட்ப ரீதியாக சமூகம் எதிர்நோக்கும் பிரச்சினை களுக்குத் தீர்வுகாண வேண்டும்.

இதற்கு நிறுவனங்களை ஊக்குவிக்கும் வகையில் மூன்று மாத இயக்கம் ஒன்றை நில ஆணையம் நேற்றுத் தொடங்கி வைத்தது. அதன்தொடர்பில் ‘ஒன் மேப்’ என்னும் புதிய செயலி ஒன்றை நேற்று அறிமுகப்படுத் தியது. எளிதாகப் பயன்படுத்தப்படும் வகையில் உருவாக்கப்பட்ட இந்தச் செயலியின் மூலம் பலதரப்பட்ட தகவல்களையும் ஒரு நொடியில் தெரிந்துகொள்ளலாம். இந்த இயக்கத்தின் ஒரு பகுதியாக கல்வியமைச்சு அல்லது குவோங் ‌ஷியூ மருத்துவமனை ஆகியவை தாங்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை வெளிக் கொணர் வர். அந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணும் வகையில் ஸ்டார்ஹப் மற்றும் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த தொழில்நுட்ப சமூகங்களின் ஆலோசனைகளை அந்த அமைப்பு கள் பெறும் என்று கூறப்படுகிறது.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

ஓவியரின் கைவண்ணத்தில் 'அமராவதி நகர்' திட்டத்துக்காக வரையப்பட்ட மாதிரிப் படம். படம்: ஊடகம்

13 Nov 2019

'அமராவதி நகர்' திட்டம் கைவிடப்பட்டதாக அதிகாரபூர்வ அறிவிப்பு

ஜூரோங்கில் உள்ள ஜாலான் டெருசனில் வீசப்பட்ட பொருட்கள். படம்: தேசிய சுற்றுப்புற வாரியம்

13 Nov 2019

பொது இடத்தில் சாமான்களை வீசியவருக்கு $9,000 அபராதம்