துப்பாக்கி, கத்தியுடன் சுற்றித்திரிந்த மூன்று இளையர்கள் கைது

சென்னை: துப்பாக்கிகளுடன் சுற்றித் திரிந்த மூன்று இளையர்களால் மயிலாப்பூர் பகுதியில் பரபரப்பு நிலவியது. மூவரையும் போலிசார் சந்தேகத்தின் பேரில் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். நேற்று முன்தினம் மயிலாப்பூரில் போலிசார் வழக்கமான சுற்றுக்காவல் பணியில் ஈடுபட்டிருந்தபோது குறிப்பிட்ட மூன்று இளையர்களையும் கபாலீஸ்வரர் கோவில் அருகே கண்டனர். அவர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டதால் அருகே சென்று விசாரித்துள்ளனர். அப்போது மூவரும் முன்னுக்குப் பின் முரணாகப் பேசவே சந்தேகம் வலுத்துள்ளது. இதையடுத்து மூவரையும் சோதனையிட்டபோது அவர்களிடம் ஒரு துப்பாக்கியும் கத்தியும் இருப்பது தெரியவந்தது. அவற்றைப் பறிமுதல் செய்த போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.