கமலுக்கு ஏன் திடீர் ஞானோதயம்: தமிழிசை

சென்னை: தமிழக அரசின் செயல்பாடு குறித்து விமர்சித்த தையடுத்து, நடிகர் கமலுக்கு ஆளுங்கட்சியினர் கடும் கண் டனம் தெரிவித்துவரும் நிலை யில், கமலுக்கு திடீரென ஞானோ தயம் வருவது ஏன் என்று தமிழக பாஜக தலைவி தமிழிசையும் கேள்வி எழுப்பியுள்ளார். இந்திப் படங்களில் நடித்து ஆதாயம் ஈட்டிய கமல்ஹாசன், இப்போது திடீரென இந்தி எதிர்ப் பிற்காக குரல் கொடுத்தேன் என்று கூறுவது ஏன் என்றும் அவர் கேட்டுள்ளார். இந்தி திணிப்பிற்கு எதிராக என்று குரல் கொடுத்தது முதற் கொண்டே தாம் அரசியலுக்கு வந்துவிட்டதாக நடிகர் கமல் ஹாசன் கூறியுள்ளார்.

அவர் சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், ஊரே கூடி ‘ஊழல் ஊழல்’ என்று ஓலமிட்டதை ஊடகத்தில் கண்ட பின்பும் சாட்சி உண்டா? ஆதாரம் உண்டா? என கேட்கும் குணாதி சயம், கல்லுளிமங்கர் போன்ற ஊழலார்க்கே உரித்தான குணாதி சயம் எனத் தமிழக அமைச்சர்களை மறைமுகமாகச் சாடியுள்ளார். இதையடுத்து தமிழக முதல் வரும் அமைச்சர்களும் அவருக்குப் பதிலடி கொடுத்து வரு கின்றனர். இந்நிலையில் தமிழிசை தன் பங்கிற்கு கமலை விமர் சித்துள்ளார். “திரைத்துறையில் இருந்தாலும் நடிகர் ரஜினி போல சமூக கருத்துக்களை கமல்ஹாசன் இதுவரை வெளிப்படுத்தியது இல்லை.

ரஜினியைப் பொறுத்தவரை ஆரம்ப காலத்தில் இருந்தே சமூக கருத்துகளைப் பேசி வருகிறார். ஆனால் கமல்ஹாசன் இவ்வளவு நாளாக சமூக பிரச்சினைகளை பேசாமல் தற்போது பேசுவது ஏன் என்று தெரியவில்லை. “அரசியல் என்பது டுவிட்டர் தளத்தில் இல்லை. அது மக்களு டன் நிஜ தளத்தில் இருக்கிறது. அதை கமல் உணர வேண்டும்,” என தமிழிசை தெரிவித்துள்ளார்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

கடந்த ஏப்ரல் மாதத்தில் செயல்படத் தொடங்கிய ஜுவல் வளாகத்தை 50 மில்லியனுக்கும் அதிகமானோர் பார்வையிட்டுள்ளனர். படம்: சாவ் பாவ்

15 Nov 2019

அனைத்துலக அளவில் சிறப்பு விருது பெற்று மேலும் மிளிர்கிறது ‘ஜுவல்’

தேசிய மரபுடைமைக் கழகத்தின் நல்லிணக்க நடைப் பயணங்கள் தொடரில் நேற்று ஸ்ரீ கிருஷ்ணன் கோயிலுக்கு வந்த வருகையாளர்களுக்கு அக்கோயிலின் அறங்காவலர் ப. சிவராமன் கோயிலின் வரலாறு பற்றியும் அங்குள்ள வழிபாட்டு நடைமுறைகளையும் விளக்குகிறார். படம்: சாவ் பாவ்

15 Nov 2019

ஏழு வழிபாட்டு இடங்களுக்கு நல்லிணக்க நடைப் பயணங்கள்

மெக்னல்லி லசால் வளாகத்தில் துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட், லசால் கலைக் கல்லூரியின் பீட்டர் சியா, ஸ்டீவ் டிக்சன், நீ ஆன் கொங்ஸியின் உதவி தலைவர் ரிச்சர்ட் லீ, நீ ஆன் கொங்ஸியின் தலைவர் ஜெமி டியோ. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

15 Nov 2019

லசால் 12 மாடி கட்டடத்துக்கு $50 மி. நன்கொடை