சவூதி அரசதந்திரியின் மேல்முறையீடு நிராகரிப்பு

குடும்பத்தோடு சிங்கப்பூருக்கு விடுமுறைக்கு வந்திருந்தபோது, ஹோட்டல் பயிற்சி வேலையாளர் ஒருவரை மானபங்கப்படுத்திய குற்றத்திற்காக விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து சவூதி அரேபிய அரசதந்திரி ஒருவர் செய்த மேல்முறையீட்டை “முற்றி லும் தகுதியற்றது” என்று கூறி உயர்நீதி மன்றம் நேற்று நிராகரித் தது. 39 வயது பண்டார் யஹ்யா ஏ.அல்சஹ்ரானிக்கு விதிக்கப்பட்ட 26 மாதங்கள், ஒரு வாரச் சிறைத் தண்டனையும் நான்கு பிரம்படியும் “உண்மையில் குறைவான தண்ட னையே” என்று மேல்முறையீட்டு நீதிபதி ஸ்டீவன் சோங் கூறினார். குறிப்பாக, அல்சஹ்ரானி “நேர் மையற்ற” முறையில் தன்னைத் தற்காத்துக் கொள்ள முயன்றிருந் தார் என்று நீதிபதி கூறினார்.

ஆனால், அரசாங்கத் தரப்பு வழக்கறிஞர் மேல்முறையீடு செய் யாத காரணத்தால் தண்டனையை நீதிபதி உயர்த்தவில்லை. சீனாவின் பெய்ஜிங் நகரில் தூதரகப் பேராளராக நியமிக்கப்பட் டிருந்த அல்சஹ்ரானி, சென்ற ஆண்டு ஆகஸ்ட் மாதம் செந் தோசாவிலிருந்த ஹோட்டலுக்கு வந்திருந்த அவர் பெரிய அறை வேண்டுமென்று கேட்டார். பெரிய அறையைக் காட்டும் பொறுப்பு 20 வயது விருந்தினர் தொடர்பு அதிகாரியிடம் கொடுக்கப்பட்டது. இருவரும் படுக்கையறையின் குளியலறையில் இருந்தபோது, பெண்ணின் கையைக் குலுக்கி அணைக்கும்படி கேட்டார். தனது மேலாளர் விருந்தினர்களை அணைப்பதைப் பார்த்திருந்ததா லும் விருந்தினரை அவமதிக்க விரும்பாததாலும், அதற்கு இணங்கினார் அந்தப்பெண்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon