ஆகாயப்படை பொறியாளர் ராஜ்குமார் மீது ஊழல் குற்றச்சாட்டு

சுமார் $1.76 மில்லியன் பெறுமான முள்ள விமானப் பழுதுபார்ப்பு, பராமரிப்பு குத்தகைகளில் ஊழல் செய்ததாக முன்னாள் சிங்கப்பூர் ஆகாயப்படை பொறியாளர் மீது நேற்று நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது. அந்தக் குத்தகைகள் பொறி யாளர் சம்பந்தப்பட்டிருந்த நிறு வனங்களுக்கு வழங்கப்பட்டன. சிங்கப்பூர் ஆகாயப்படையில் பொறியாளராக வேலை செய்த ராஜ்குமார் பத்மநாதன், விமானப் பழுதுபார்ப்பு, பராமரிப்புப் பணி களுக்கு குட்வில் ஏவியேஷன் சிஸ்டம் நிறுவனத்தைப் பரிந்துரை செய்தபோது, அந்நிறுவனம் தனக்குச் சொந்தமானது என்பதை யும் தன் கட்டுப்பாட்டில் நிறுவனம் நடத்தப்பட்டது என்பதையும் அவர் மறைத்துவிட்டார். இதன் காரணமாக, சுமார் $869,000 பெறுமானமுள்ள பழுது பார்ப்பு, பராமரிப்புப் பணிகளுக்காக குட்வில் நிறுவனத்திற்கு அரசாங்கம் பணம் செலுத்தியது. டுராடெக் இன்ஜீனியரிங் நிறு வனத்தையும் குத்தகையாளராக ஆகாயப்படைப் பிரிவிடம் பரிந்துரைத்தார் ராஜ்குமார். டுராடெக் நிறுவனம் குட்வில் அல்லது ஈகல் ஃபிளைட் ஏவியேஷன் சர்வீசஸ் நிறுவனங் களிடம் பணியை உள்குத் தகைக்குக் கொடுக்கும்.

ஊழல் குற்றம் சுமத்தப்பட்டுள்ள ராஜ்குமார் பத்மநாதன். படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon