மானபங்கம்: 38 வயது ஆடவர் மீது குற்றச்சாட்டு

தொடர் மானபங்க குற்றச்செயல் களில் ஈடுபட்ட சந்தேக நபர் மீது நேற்று நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது. பதினொரு வயது சிறுமியை கடந்த ஜூலை 14ஆம் தேதி காலை 7 மணி அளவில் ரிவர் வேல் ஸ்திரீட் மேம்பால நடை பாதையில் மானபங்கப்படுத்திய குற்றத்திற்காக 38 வயதான ஆல்ட்ரின் இலியாஸ் கைது செய்யப்பட்டார். ஜூலை 5 முதல் 17ஆம் தேதி வரையில் ஹவ்காங், செங்காங் பகுதியில் நடந்த சுமார் பத்து மானபங்கக் குற்றச்செயல்களில் இவர் ஈடுபட்டிருக்கக்கூடும் என காவல்துறை கூறியுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்கள் கூறிய அடையாளங்களின் மூலம் அனைத்து குற்றங்களிலும் சம்பந்தப்பட்டவர் ஒருவராக இருக் கக்கூடும் என்ற அடிப்படையில் காவல்துறை தனது தேடுதல் வேட்டையைத் தொடங்கியது. அங் மோ கியோ காவல்துறை யினரிடம் கடந்த வெள்ளியன்று ஆங்கர்வேல் அருகே சந்தேகநபர் பிடிபட்டதாகத் தெரிவித்தது.