பாலியல் தொழில்: சந்தேக நபர் கைது

இணையம் வழியாக பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக நம்பப் படும் சந்தேக நபர் மீது நேற்று நீதி மன்றத்தில் குற்றம் சாட்டப் பட்டது. தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த 39 வயது பெண்ணின் வருமானத் தில் வாழ்ந்துவந்த 29 வயது சா யான் லூங், மாதர் சாசனத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டார். இணையம் வழி அனைத்துலக அளவில் பாலியல் தொழிலில் ஈடு பட்ட கும்பலுடன் இவருக்கும் தொடர்பிருக்கலாம் என்றும் சந் தேகிக்கப்படுகிறது. கடந்த வியாழக்கிழமை அன்று திரு சா மற்றும் இருபது பேரை காவல்துறையினர் சுற்றி வளைத் தனர். இவர்களில் நான்கு பேர் ஆண்கள், 16 பேர் பெண்கள். அனைவரும் 22 முதல் 57 வயது வரையிலானவர்கள். ‘லக்சாபாய்’ என்ற இணையத் தளம் வழியாக பாலியல் தொழி லில் ஈடுபட்டவர்களைக் கண்டு பிடிப்பதற்காக காவல்துறையினர் மேற்கொண்ட தொடர் சோத னையில் இவர்கள் சிக்கினர். இந்த நடவடிக்கை மூலம் இரண்டு கும்பல்களின் நடவடிக் கைகள் ஒடுக்கப்பட்டுள்ளன.

Loading...
Load next