சுடச் சுடச் செய்திகள்

கேலாங்கில் அதிரடி சோதனை: சந்தேகப் பேர்வழிகள் 60 பேர் கைது

கேலாங் பகுதியில் உள்ள தெருக் களிலும் அங்குள்ள ஹோட்டல் களிலும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த அதிகாரிகள் நடத்திய மூன்று நாள் சோதனையில் குற்றச்செயல்களில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 60 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் கள்ள சிகரெட் விற்பனை, சட்டவிரோதமாக விற் கப்பட்டு வந்த இருமல் மருந்து, மாத்திரைகள் ஆகியவற்றுக்காக நால்வர் கைது செய்யப்பட்டனர். இவற்றின் மொத்த சந்தை மதிப்பு $11,000 என்று போலிசார் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறினர். மேலும், குடியிருப்புகளில் பாலியல் தொடர்பான குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக ஏழு பெண்களும் போதைப்பொருள் தொடர்பான குற்றங்களில் ஈடுபட்டதாக நான்கு ஆடவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களுடன், பொது இடங் களில் சூதாட்டத்தில் ஈடுபட்ட, பொது இடங்களில் சூதாட்டத்தை ஊக்குவித்த குற்றங்களுக்காக 17 வயதிலிருந்து 65 வயது வரையிலான 44 ஆடவர் கைது செய்யப்பட்டனர்.

இவர்கள் தவிர ரகசியக் கும்பல் சட்டத்தின்கீழ் 34 வயது ஆடவர் ஒருவரும் கைது செய்யப் பட்டுள்ளார். இவர்களுக்கு எதி ரான புலன் விசாரணை தொடர் வதாக போலிசார் கூறுகின்றனர். சிங்கப்பூர் சுங்கத் துறை, குடிநுழைவு, சோதனைச் சாவடி ஆணையம், குற்றப் புலனாய்வுத் இலாகா, சுகாதார அறிவியல் ஆணையம் ஆகிய அமைப்பு களைச் சேர்ந்த அதிகாரிகளின் உதவியுடன் பிடோக் போலிஸ் பிரிவு தலைமையில் இந்த அதிரடி சோதனைகள் மேற்கொள்ளப் பட்டன. இந்த அமைப்புகள் தந்த ஆதரவு, அதன் அதிகாரிகள் வெளிப்படுத்திய நிபுணத்துவ செயல்பாடு, மற்ற அதிகாரி களுடன் ஒரு குழுவாக அவர்கள் இணைந்து பணியாற்றிய விதம் ஆகியவை இந்த சோதனை நடவடிக்கைகள் வெற்றியடை வதற்கு காரணங்களாக விளங்கி யதாக பிடோக் போலிஸ் பிரிவின் துணை ஆணையர் டான் டின் வீ அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon