சுடச் சுடச் செய்திகள்

பேருந்து ஓட்டுநர் பற்றிய பதிவுக்கு எஸ்எம்ஆர்டி பதில்

உட்லண்ட்ஸ் தற்காலிக பேருந்து நிலையத்தில் இருந்து தெம் பனிஸுக்கு செல்லும் தடம் எண் 969 கொண்ட பேருந்து ஒன்றின் ஓட்டுநருக்கு ஆங்கில மொழியில் தொடர்புகொள்வது சிரமமாக இருந்ததால் வழியில் பேருந்தை நிறுத்திவிட்டு, தொடர்ந்து ஓட்ட மறுத்தார் என ‘ஃபேஸ்புக்’ பதிவு ஒன்று குறிப்பிடுகிறது. அதனால் பயணிகள் அதே தட எண்ணைக் கொண்ட வேறொரு பேருந்துக்கு மாற வேண்டிய அவசியம் ஏற்பட்டதாக வும் அந்தப் பதிவில் குறிப்பிடப் பட்டுள்ளது. பேருந்தில் ஏறிய சிறுமி ஒருவருக்கு எவ்வளவு கட்டணம் செலுத்த வேண்டும் என்பதன் தொடர்பில் ஓட்டுநருக்கும் பயணிக்கும் பிரச்சினை ஏற்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது. ஆனால் தெளிவான மேல் விவரங்கள் அதில் இல்லை. அந்தப் பதிவை 2,000 பேருக்கு மேல் பார்வையிட்டுள்ளனர். இந்த சம்பவத்தால் பாதிக்கப் பட்டவர்களிடம் எஸ்எம்ஆர்டி மன்னிப்புக் கோரி ஃபேஸ்புக் பதிவை வெளியிட்டுள்ளது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon