முன்பதிவற்ற பயணங்களுக்கும் கைபேசி வழி கட்டண முறை

தெருமுனைகளில் இருந்து ‘கம்ஃபர்ட்டெல்கிரோ’ டாக்சியை நிறுத்தி ஏறும் பயணிகளும் தங்கள் கைபேசி வழியாக பயணங் களுக்கான கட்டணத்தைச் செலுத்தும் வாய்ப்பு விரைவில் உருவாகவுள்ளது. அடுத்த மாதம் முதல் ‘கம்ஃபர்ட்டெல்கிரோ’ நிறுவனம் புதிய கட்டண முறையை ‘மாஸ்டர்பாஸ்’ எனப்படும் மின்னிலக்க கட்டணச் சேவை மூலம் வழங்க இருக்கிறது. இந்த முறையில் கட்டணம் செலுத்த பணம் அல்லது அட்டைகள் தேவைப்படாது. ஏற்கெனவே முன்பதிவு ஏதும் செய்யாமல் சாலையில் செல்லும் டாக்சிகளை நிறுத்தி ஏறும் பயணிகளுக்கு இத்தகைய கட்டண முறை அறிமுகப்படுத் தப்படுவது உலகில் இதுவே முதல் முறை. சிங்கப்பூரில் 2014ஆம் ஆண்டு ‘மாஸ்டர்பாஸ்’ சேவை அறிமுகப் படுத்தப்பட்டது. முகவரிகள், கடன்பற்று அட்டையின் தகவல் கள் உட்பட கட்டணம் தொடர்பான தகவல்களை பாதுகாப்பான இணையக் கட்டமைப்பில் சேகரிக் கக்கூடியது ‘மாஸ்டர்பாஸ்’.